என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திண்டுக்கல் பஸ்நிலையத்தில் தனியார் வாகனங்கள் நிறுத்தினால் கடும் நடவடிக்கை -கலெக்டர் எச்சரிக்கை
- சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து அனைத்து துறை அலுவ லர்களுடன் ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது.
- பஸ் நிலையத்தினுள் பஸ்கள் நிறுத்தத்தில் தனியார் வாகனங்கள் நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து அனைத்து துறை அலுவ லர்களுடன் ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:-
திண்டுக்கல் மாவட்ட த்தின் சட்டம் ஒழுங்கை பேணி பராமரித்திடவும், பாதுகாப்பான சாலை போக்குவரத்தை உறுதி செய்திடவும், மாநகரின் முக்கிய வீதிகளில் 2 சக்கரம் மற்றும் 4 சக்கர வாக னங்களை பொதுமக்களுக்கு எந்தவித இடையூறுமின்றி நிறுத்துவதற்கும், பஸ் நிலையத்தினுள் பஸ்கள் நிறுத்தத்தில் தனியார் வாகனங்கள் நிறுத்துவதை தடுப்பதற்கும், மேலும் வாகனங்களை முறையாக நிறுத்துவதற்கு சங்கிலிகள் அமைத்து தனியாக இடம் ஒதுக்கி வாகனங்கள் நிறுத்துவதை கண்காணி க்கவும், விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் சம்மந்த ப்பட்ட அலுவல ர்கள் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சாலைகளில் வேகத்தடை கள், வாகனத்தடுப்புகள் இருப்பது வாகன ஓட்டிகளுக்கு எளிதில் தெரியும் வகையில் ஒளிரும் பட்டைகளுடன் அமைக்க வேண்டும். மேலும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விபத்துகள் ஏற்படுவதை தடுக்கும் வகையிலும், வாகன ஓட்டிகள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையிலும், ஒளிரும் ஒட்டுவில்லைகளை முக்கிய இடங்களில் அமைப்பதற்கும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் போக்குவரத்துகளை சீர்படுத்துவதற்கும் துறை சார்ந்த அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பொது மக்களிட மிருந்து பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாகவும், கோரிக்கைகள் மீதான நடவடிக்கையை குறிப்பிட்ட காலத்திற்குள் மேற்கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை கள் குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சம்மந்தப்பட்ட அலுவல ர்களை அனுப்பி வைக்க வேண்டும். அரசு விதிமுறை களை பின்பற்றாமல் உள்ளவர்களை கண்டறிந்து காவல்துறையினர் நடவடி க்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்