search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆபத்தை உணராமல் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லும் மாணவர்கள்
    X

    பஸ்சின் இருபுறங்களிலும் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்கள்.

    ஆபத்தை உணராமல் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லும் மாணவர்கள்

    • காலை, மாலை நேரங்களில் கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட வேண்டும்.
    • கூட்ட நெரிசல் காரணமாக மாணவர்கள் பஸ்சின் படிக்கட்டில் தொங்கி பயணம் செய்கின்றனர்.

    திருவோணம்:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ,திருவோணம், நம்பிவயல், ஊரணிபுரம், கரம்பக்குடி, உள்ளிட்ட பகுதியிலிருந்து தினந்தோறும் கல்லூரி, மற்றும் பள்ளி, மாணவ, மாணவிகள், கல்லாக்கோட்டை அரசு கல்லூரி, செவந்தான்பட்டி கல்லூரிகளில் படிப்பதற்கு பஸ்சில் பயணித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கல்லூரி செல்ல மற்றும் மாலை வீடு திரும்பும் நேரத்தில் மாணவர்கள் கூட்டம் மற்றும் பொது மக்கள் அதிக அளவில் உள்ளதால் பஸ் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    மேலும் கூட்ட நெரிசல் காரணமாக மாணவர்கள் பஸ்சின் படிக்கட்டில் தொங்கி கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.

    இதனால் அவர்கள் ஆபத்தில் சிக்கி கொள்ளும் சூழ்நிலை உருவாகிறது.எனவே பட்டுக்கோட்டையில் இருந்து நம்பிவயல், திருவோணம், ஊரணிபுரம், வழியாக கந்தர்வகோட்டைக்கு, மற்றும் திருவோணத்தில் இருந்து ஒரத்தநாடு கல்லூரிக்கு மாணவ மாணவிகள் செல்ல காலை மாலை நேரங்களில்

    கூடுதலாக பேருந்து இயக்கப்பட வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

    Next Story
    ×