search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானலில் மண்டல போட்டிகளை நடத்த வேண்டும்  மாணவர்கள் கோரிக்கை
    X

    கோப்பு படம்

    கொடைக்கானலில் மண்டல போட்டிகளை நடத்த வேண்டும் மாணவர்கள் கோரிக்கை

    • மண்டல விளையாட்டுப் போட்டிகளை பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையே அந்தந்த தாலுகாக்களில் நடத்தி வருகின்றனர்.
    • கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள பள்ளி மாணவ மாணவிகள் பல கிலோமீட்டர் தூரம் பயணித்து போட்டிகளில் பங்குபெறும் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    கொடைக்கானல்:

    மண்டல விளையாட்டுப் போட்டிகளை பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையே அந்தந்த தாலுகாக்களில் நடத்தி வருகின்றனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் 28 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் ஆண்டுதோறும் கொடைக்கானல் மலைப்பகுதியிலேயே நடத்தப்படுகிறது.

    மாவட்ட உடற்கல்வித்துறை சார்பில் இந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறும் மாணவ மாணவிகள் தாலுகா தலைநகர பகுதிகளில் உள்ள விளையாட்டு மைதானங்களில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.

    இந்த ஆண்டு டிஜோன் விளையாட்டுப் போட்டிகள் அந்தந்த கல்வி மாவட்டங்களில் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. கொடைக்கானல், வத்தலகுண்டு கல்வி மாவட்டத்தை சேர்ந்ததாகும். இதனால் இந்த ஆண்டு நடைபெறும் மண்டல விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட உடற்கல்வித்துறை வத்தலகுண்டு பகுதியில் நடத்த ஏற்பாடு செய்து வருகிறது.

    கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள பள்ளி மாணவ மாணவிகள் பல கிலோமீட்டர் தூரம் பயணித்து போட்டிகளில் பங்குபெறும் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கொடைக்கானலைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பணம் செலவு செய்து பயணித்து வத்தலகுண்டு பகுதிக்கு சென்று அங்கு நடைபெற உள்ள மண்டல விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    வத்தலகுண்டு பகுதியில் விளையாட்டு போட்டிகள் நடைபெறுவதால் கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள குறிப்பாக மேல் மலை கிராமங்களான பூண்டி, மன்னவனூர், பூம்பாறை, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் பங்கு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே இந்த ஆண்டு கொடைக்கானல் மலைப்பகுதியிலேயே நடத்த வேண்டும் என்று மலை கிராம பள்ளி மாணவ-மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்ட நிர்வாகமும் உடற்கல்வி துறையும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபற்றி மாவட்ட உடற்கல்வி துறையினரை தொடர்பு கொண்ட போது அவர்கள் எந்த பதிலையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×