என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ராகிங்கை தடுக்க மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்- நீலகிரி கலெக்டர் அருணா பேச்சு
- ரேகிங் நடந்தால், அது தொடர்பான புகார்கள் அளிக்க தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
- சட்டம், ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பான கூட்டம் நடைபெற்றது.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு, சாலை பாதுகாப்பு, ரேகிங் எதிர்ப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான கூட்டம் மாவட்ட கலெக்டர் மு.அருணா தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் அருணா கூறியதாவது:-
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ரேகிங் புகார்கள் பெறப்படும் வகையில் புகார் பெட்டிகள், அதேபோல் மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் அடங்கிய குழு அமைத்து, ரேகிங் நடந்தால், அது தொடர்பான புகார்கள் அளிக்க தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும் அரசு தங்கும் விடுதிகளில், சம்மந்தப்பட்ட வார்டன்கள் ரேகிங் தொடர்பான நிகழ்வுகள் ஏதேனும் ஏற்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ரேகிங் ஏற்படாமல் இருக்க மாதந்தோறும் மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, சட்டம், ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பான கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சவுந்திரராஜன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனப்பிரியா (பொது), வருவாய் கோட்டாட்சியர்கள் மகராஜ் (ஊட்டி), பூஷணகுமார் (குன்னூர்), முகமது குதரதுல்லா (கூடலூர்), வட்டாட்சியர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.