search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர்கள் லட்சியத்துடன் கல்வி பயில வேண்டும்- எஸ்.பி அறிவுரை
    X

    மாணவ- மாணவிகளுடன் போலீஸ் சூப்பிரண்டு மீனா கலந்துரையாடினார்.

    மாணவர்கள் லட்சியத்துடன் கல்வி பயில வேண்டும்- எஸ்.பி அறிவுரை

    • மாணவிகளை போலீசார் வாகனத்தில் அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
    • நோக்கம் குறித்து கேட்டறிந்து சாக்லேட், பென்சில் ஆகியவற்றை வழங்கினார்.

    சீர்காழி:

    இளம் வயதில் தவறான, தீய வழிகளில் கவனம் செலுத்தாமல், படிப்பு மற்றும் விளையாட்டில் கவனம் செலுத்தி அதில் ஈடுபாடுடன் சிறந்து விளங்கவேண்டும் என்ற நோக்கில் சீர்காழி சட்டநாதபுரத்தில் காவல்துறை சார்பில் சிறுவர், சிறுமிகள் மன்றம் தொடங்கப்பட்டு அதில் கேரம்போர்டு, சதுரங்கம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுக்கள், சாரணர் ஆசிரியரை கொண்டு கற்றுதரப்படுகிறது. சுமார் 48 மாணவ-மாணவியர் பயின்று வரும் நிலையில் இங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா நேரில் வந்து ஆய்வு செய்தார். பின்னர் மாணவ-மாண விகளுடன் கலந்துரையாடி லட்சியத்துடன் கல்வி பயின்று அதனை நோக்கி நாம் தினந்தோறும் முன்னேறி செல்லவேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் நோக்கம் குறித்து கேட்டறிந்து சாக்லேட், பென்சில் ஆகியவற்றை வழங்கினார்.

    பின்னர் மாணவ -மா ணவிகளை காவல்துறையின் வாகனத்தில் அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைத்தார். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு லாமெக், இன்ஸ்பெக்டர் சிவக்குமார், தனிபிரிவு காவலர் மூர்த்தி உடனிருந்தனர்.

    Next Story
    ×