என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கடலூரில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்
- மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சூல் மிஸ்ரா தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
- திட்டப்பணிகள் குறித்தும் அதன் முன்னேற்றம் குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மற்றும் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் கலெக்டர் அருண் தம்புராஜ் முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சூல் மிஸ்ரா தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக புயல் பாதுகாப்பு மையங்கள், தற்காலிக தங்குமிடங்கள் மற்றும் தேவையான பேரிடர் மீட்பு உபகரணங்கள் தயார்நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும், மாநகராட்சி, நகராட்சிகள், பேருராட்சிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் குறித்தும் அதன் முன்னேற்றம் குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் மற்றும் அனைத்து துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.