என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு
- குப்பை கிடங்கில் கட்டப்பட்டு வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆய்வு செய்யப்பட்டது.
- குப்பை கிடங்கு சேமிப்பு வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
நாகப்பட்டினம்:
வேதாரண்யம் நகராட்சி சார்பில் நாகை சாலையில் 4 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணியினையும், காலை உணவு திட்ட சமையல் கூடத்தை நகராட்சி இயக்குனர் சிவராசு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து ரூ.2 கோடியே 85 லட்சம் மதிப்பில் கடற்கரை சாலையில் கசடு கழிவு மேலாண்மை குப்பை கிடங்கில் கட்டப்பட்டு வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தையும், நகராட்சி குப்பை கிடங்கையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சரஸ்வதி, மண்டல செயற்பொறியாளர் பார்த்திபன், நகர்மன்ற தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர் வெங்கட லட்சுமணன், பொறியாளர் கோவிந்தராஜ், ஓவர்சியர் குமரன் உள்ளிட்ட நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் குப்பை கிடங்கு சேமிப்பு வளாகத்தில் நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு மரக்கன்றுகளை நட்டார். நிகழ்ச்சியில் குப்பை கிடங்கில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.