search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே கோடை கால சிறப்பு மலை ரெயில் சேவை
    X

    மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே கோடை கால சிறப்பு மலை ரெயில் சேவை

    • மலை ெரயிலில் பயணச் சீட்டு கிடைக்காமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர்.
    • தினசரி காலை 7.10 மணிக்கு நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ெரயில் இயக்கப்படுகிறது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம்- ஊட்டி, குன்னூர்- ஊட்டி இடையே கோடைகால சிறப்பு மலை ெரயில் சேவை இயக்கப்படுவது குறித்து சேலம் கோட்ட ெரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ெரயில் நிலையத்தில் இருந்து தினசரி காலை 7.10 மணிக்கு நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ெரயில் இயக்கப்படுகிறது. இதில் மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை ெரயில் பாதையில் பசுமையான காடுகள், அருவிகள், வன விலங்குகள், பாறைகளால் குடையப்பட்ட ெரயில் குகைகள் உள்பட இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசிக்க உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூரைச் சேர்ந்த பயணிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    ஆனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் மலை ெரயிலில் பயணச் சீட்டு கிடைக்காமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர். இதனால் ஆண்டுதோறும் கோடை விழாவையொட்டி சேலம் கோட்ட ெரயில்வே நிர்வாகம் சார்பில் மேட்டுப்பாளையம்-ஊட்டி, குன்னூர்-ஊட்டி, ஊட்டி-கேத்தி இடையே சிறப்பு ெரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி இந்த ஆண்டுக்கான சிறப்பு ெரயில்கள் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 14) முதல் ஜூன் 25-ந் தேதி வரை இயக்கப்பட உள்ளன. இந்த ெரயில்கள் வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய கிழமைகளில் இயக்கப்படுகின்றன. குன்னூரில் இருந்து காலை 8.20 மணிக்கு சிறப்பு ெரயில் புறப்பட்டு ஊட்டி ரயில் நிலையத்துக்கு காலை 9.40 மணிக்கு சென்றடையும். இதேபோல் ஊட்டி ெரயில் நிலையத்திலிருந்து மாலை 4.45 மணிக்கு சிறப்பு மலை ெரயில் புறப்பட்டு குன்னூர் ெரயில் நிலையத்துக்கு மாலை 5.55 மணிக்கு வந்தடையும். மேட்டுப்பாளையம் ெரயில் நிலையத்தில் இருந்து ஏப்ரல் 15 முதல் ஜூன் 24-ந் தேதி வரை சனிக்கிழமைகளில் சிறப்பு ெரயில் இயக்கப்படுகிறது. மேட்டுப்பாளையம் ெரயில் நிலையத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு சிறப்பு ெரயில் புறப்பட்டு ஊட்டிக்கு மதியம் 2.25 மணிக்கு சென்றடையும். இதேபோல் ஊட்டி ரெயில் நிலையத்தில் இருந்து ஏப்ரல் 16 முதல் ஜூன் 25-ந் தேதி வரை வாரந்தோறும் ஞாயிற்றுக்கி ழமைகளில் சிறப்பு மலை ெரயில் இயக்கப்படுகிறது. இந்த ெரயில் ஊட்டி ரெயில் நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் இருந்து பகல் 11.25 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையத்துக்கு மாலை 4.20 மணிக்கு வந்தடையும்.

    மேலும், ஏப்ரல் 14 முதல் ஜூன் 25-ந் தேதி வரை ஊட்டி -கேத்தி இடையே சிறப்பு மலை ெரயில் வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கட்கிழமைகளில் இயக்கப்பட உள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×