என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கல்
- குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ரூ.2466 மதிப்பிலான ரசாயன உரங்கள் வழங்கினார்.
- ஒரு ஏக்கருக்கு பொதுப் பிரிவினருக்கு 50 சதவீத மானியமும், தனி பிரிவினருக்கு 70 சதவீத மானியத்தில் இடுபொருட்களும் வழங்கி பேசினார்.
பேராவூரணி:
தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் குறுவை தொகுப்பு திட்டம்-2022 மானியத்தில் இடுபொருட்கள் வழங்கும் விழா சேதுபாவாசத்திரம் வட்டாரம் குருவிக்கரம்பையில் நடைபெற்றது. விழாவிற்கு தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் மத்திய திட்டம் ஈஸ்வர் தலைமை வகித்தார். அசோக் குமார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) சாந்தி வரவேற்றார்.
சேதுபாபாசத்திரம் வட்டாரத்தில் குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ரூ.2466 மதிப்பிலான ரசாயன உரங்களும், மாற்றுப்பயிர் சாகுபடி திட்டத்தில் சிறுதானிய பயிர்களான கேழ்வரகு, நிலக்கடலை, உளுந்து சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்கு பொதுப் பிரிவினருக்கு 50 சதவீத மானியமும், தனி பிரிவினருக்கு 70 சதவீத மானியத்தில் இடுபொருட்கள் தொகுப்பை சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார் வழங்கி பேசினார். விடுபட்ட தகுதி உள்ள விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை, கணினி சிட்டா, அடங்கல் மற்றும் வங்கி பாஸ் புத்தகங்க நகலுடன் நேரடியாகவோ, உழவன் செயலிலோ அல்லது வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் வந்து பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.