search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் கண்காணிப்பு காமிரா இயக்கம் - அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
    X

    கண்காணிப்பு காமிரா இயக்கத்தை அமைச்சர் கீதாஜீவன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்த காட்சி.

    தூத்துக்குடியில் கண்காணிப்பு காமிரா இயக்கம் - அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்

    • கண்காணிப்பு காமிராக்களை வணிக நிறுவனங்கள், பள்ளிகள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் வைக்க அரசு வலியுறுத்தி வருகிறது.
    • அதன்படி, அமுதா நகர் மெயின் சந்திப்பு ஆகிய இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் இயக்கத்தை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

    தூத்துக்குடி:

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதிலும், திருட்டு, கொலை, கொள்ளை போன்றவற்றை தடுப்பதில் போலீசாருக்கு உதவியாக இருப்பது சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிராக்கள்.

    இந்த சி.சி.டி.வி. காமி ராக்கள் பொருத்தப்பட்டுள்ள இடங்களில் குற்ற சம்ப வங்கள், சமூக விரோதி களின் நடமாட்டங்கள் பெருமளவு குறைந்துள்ளன. எனவே, கண்காணிப்பு காமிராக்களை வணிக நிறுவனங்கள், பள்ளிகள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் வைக்க அரசு வலியுறுத்தி வருகிறது.

    அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி 50-வது வார்டுக்கு உட்பட்ட கணேசன் காலனி 3-வது தெரு சந்திப்பு மற்றும் அமுதா நகர் மெயின் சந்திப்பு ஆகிய இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் இயக்கத்தை தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன், பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், கவுன்சிலர் சரவணகுமார், வட்ட செயலாளர்கள் மூக்கையா, சுப்பையா, கூட்டுறவு ரேசன் கடை பணியாளர்கள் சங்க செயலாளர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×