search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நூலக கட்டுமான பணிகள் ஆய்வு
    X

    நூலக கட்டுமான பணிகளை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

    நூலக கட்டுமான பணிகள் ஆய்வு

    • ரூ.1 கோடியே 32 லட்சம் மதிப்பில் அரங்கநாதன் பெயரில் மாதிரி நூலகம் கட்டப்பட்டு வருகிறது.
    • கட்டிடத்தின் ஒவ்வொரு பகுதியையும் பார்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தார்.

    சீர்காழி:

    சீர்காழியில் கிளை நூலகம் பல ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. மழைக்காலங்களில் வாடகை கட்டிடத்தில் மழைநீர் கசிந்தும், நூலக கட்டடங்கள் இடம் பெயரும் போதும் பல அரிய வகை நூல்கள் கிழிந்தும் சேதம் அடைந்து வந்தன.

    நூலக தந்தை எனப் போற்றப்படும் எஸ்.ஆர்.அரங்கநாதன் பிறந்த சீர்காழியில் அவரது பெயரில் மாதிரி நூலகம் அமைக்க வேண்டும் என பல ஆண்டு களாக வாசகர்கள், பொது மக்கள் சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த கோரிக்கையை ஏற்று சட்டமன்றத்தில் கேள்வி நேத்தின் போது பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சீர்காழியில் அரங்கநாதன் பெயரில் புதிய நூலக கட்டடம் கட்டப்படும் என அறிவித்தார்.

    அதன்படி சீர்காழியின் மையப் பகுதியான மணி கூண்டு அருகே ரூ.1 கோடியே 32 லட்சம் செலவில் எஸ் .ஆர் .அரங்கநாதன் பெயரில் மாதிரி நூலகம் கட்டப்பட்டு வருகிறது.

    மாணவர்களுக்கானவசதி, போட்டித் தேர்வுக்கான வசதி, சிறுவர்கள் நூல்கள், மின் நூலகம், பெண்களுக்கான தனிப்பிரிவு என பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த மாதிரி நூலகம் கட்டப்பட்டு வருகிறது .

    இதனிடையே இந்த நூலக கட்டடம் கட்டுமான பணியை இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி ,காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்ய நாதன் உடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    கட்டடத்தில் ஒவ்வொரு பகுதியும் பார்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தார்.

    கட்டடத்தின் அருகில் உள்ள பழுதடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டடத்தை இடமாற்றிவிட்டு அங்கு நூலக தந்தை அரங்கநாதன் சிலை வைத்திட விடுக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார் பணிகள் அனைத்தையும் நிறைவு செய்து ஒரு மாத காலத்தில் கட்டிடத்தை பயன்பாட்டிற்கு திறக்கவும் அப்போது தெரிவித்தார்.

    ஆய்வின் போது நூலகத்துறை இயக்குனர் இளம்பகவத்,மாவட்ட கலெக்டர் மகாபாரதி இணை இயக்குனர் அமுதவல்லி, கோட்டாட்சியர் அர்ச்சனா, சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செ ல்வம், பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் ,நகர் மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன்,துணைத் தலைவர் சுப்பராயன் மாவட்ட பொருளாளர் அலெக்ஸா ண்டர், ஒன்றிய செயலாளர் பிரபாகரன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சாமிநாதன் தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல பொறுப்பாளர் ஸ்ரீதர், ஒப்பந்ததாரர் அன்பழகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×