search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருப்பூரில் போலீஸ் நிலையம் கட்டுவதற்கு நில அளவீடு பணி
    X

    நில அளவிடும் பணி நடந்த போது எடுத்த படம்.

    கருப்பூரில் போலீஸ் நிலையம் கட்டுவதற்கு நில அளவீடு பணி

    • எல்லைக்கு உட்பட்ட கருப்பூரில் புதிதாக காவல் நிலையம் தொடங்கப்படும் என்று கடந்த 30-6 -2018-ம் ஆண்டு அப்போதைய தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
    • பனங்காடு, என்ற இடத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு அளவீடு செய்யும் பணி தொடங்கியது.

    கருப்பூர்:

    சேலம் மாநகரம், எல்லைக்கு உட்பட்ட கருப்பூரில் புதிதாக காவல் நிலையம் தொடங்கப்படும் என்று கடந்த 30-6 -2018-ம் ஆண்டு அப்போதைய தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை தொடர்ந்து அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி புதிய போலீஸ் நிலையத்தை திறந்து வைத்தார்,

    புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில் கருப்பூர் பழைய பேரூராட்சி அலுவலகத்தில் காவல் நிலையம் செயல்பட்டு வந்தது. இந்தக் கட்டிட வளாகத்தில் கைதிகள் அறை, இன்ஸ்பெக்டர்கள் அமரும் இடம் இல்லாமலும், உணவு அருந்தும் இடம் இல்லாமலும் அங்குள்ள மரத்துக்கடியில் திறந்தவெளியில் பெஞ்சு அமைத்து பயன்படுத்தி வந்தனர். அது மட்டும் இன்றி வாகனங்கள் நிறுத்த இடம் இல்லாமல் போலீசாரும் பொதுமக்களும் அவதிப்பட்டு வந்தனர். இதனால் பொதுமக்கள் உடனடியாக அனைத்து வசதிகளுடன் காவல் நிலையம் அமைத்து தர வேண்டும் என அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

    இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தரவின் பெயரில் சாமிநாய்க்கன்பட்டி செல்லும் வழியில் பனங்காடு, என்ற இடத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு அளவீடு செய்யும் பணி தொடங்கியது. ஓமலூர் தாசில்தார் வல்ல முனியப்பன், தலைமையில் வட்டார நில ஆய்வாளர் மணி, கிராம நிர்வாக அலுவலர் செந்தில்நாதன், மற்றும் குழுவினர் நில அளவிடும் பணி செய்தனர், இதில் சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் நாகராஜன், மற்றும் போலீசார் வந்து கொண்டனர் . இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், தமிழக அரசு முறையாக கருப்பூர் காவல் நிலையம் செயல்பட அனுமதித்தும் கடந்த 4. ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது தற்போது அனைத்து வசதிகளும் கூடிய காவல் நிலையம், குடியிருப்பு வளாகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    Next Story
    ×