search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ்நாடு விவசாய குத்தகைதாரர்கள் பாதுகாப்பு நல சங்க கூட்டம்
    X

    கூட்டத்தில் மாநில தலைவர் செருகளத்தூர் ஜெயசங்கர் பேசினார்.

    தமிழ்நாடு விவசாய குத்தகைதாரர்கள் பாதுகாப்பு நல சங்க கூட்டம்

    • குத்தகைதாரர்களுக்கு உயர்த்தப்பட்ட குத்தகை தொகையை குறைக்க வேண்டும்.
    • குத்தகை சாகுபடிதாரர்களின் குத்தகை பாக்கியை ரத்து செய்ய வேண்டும்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் தமிழ்நாடு விவசாய குத்தகைதாரர்கள் பாதுகாப்பு நல சங்கத்தின் ஒன்றிய ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட தலைவர் துரையரசன் தலைமையில் நடைபெற்றது.

    நாகை மாவட்ட தலைவர் விவேக் தியாகராஜன், புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங் கிணைப்பாளர் இருதயதாஸ் வரவேற்று பேசினார்.

    மாநில தலைவர் செருகளத்தூர் ஜெயசங்கர் பேசினார். இந்த கூட்டத்தில், காவிரி நீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற பைகாரா போன்ற அருவிகளை தமிழக எல்லையில் உள்ள காவிரியோடு இணைக்க வேண்டும். குத்தகை சாகுபடிதாரர்களின் குத்தகை பாக்கியை ரத்து செய்ய வேண்டும்.

    கோவில் நிலங்களில் சாகுபடி செய்யும் குத்தகைதாரர்களுக்கு உயர்த்தப்பட்ட குத்தகை தொகையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் மாநில பொதுச்செயலாளர் பாபு கந்தவேல், மாநில துணைத்தலைவர்கள் வீரமணி, செல்வம், இணைச்செயலாளர் இளையராஜா, மாநில இணை ஒருங்கிணைப்பாளர் ராமதாஸ் திருத்துறைப்பூண்டி தோட்டக்கலை உதவி இயக்குநர் இளவசரன், ஒன்றிய நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், ஜெயக்குமார், நடராஜன், சித்திரவேல், சாமிநாதன், கேசவன், தினகரன், பாண்டியன், மங்களூர் சக்திவேல் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.

    முடிவில் ஒன்றிய தலைவர் மோகன் ராஜ் நன்றி கூறினார்.

    Next Story
    ×