search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவிரி ஆணையத்தை கலைக்க தமிழக அரசு கோர வேண்டும் - மணியரசன் வலியுறுத்தல்
    X

    மணியரசன்.

    காவிரி ஆணையத்தை கலைக்க தமிழக அரசு கோர வேண்டும் - மணியரசன் வலியுறுத்தல்

    • காவிரி தொடா்பான எந்த சிக்கலையும் விவாதித்து முடிவெடுக்கக்காவிரி மேலாண்மை ஆணையத்துக்குக் கட்டற்ற அதிகாரம் இருப்பதாகக் கூறினார்.
    • ஒரு வேளை அந்த ஆணைய கூட்டம் நடந்தால் அதை புறக்கணிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

    காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஜூன் 17- ஆம் தேதி கூட்ட உள்ளதாகவும், அதில் கா்நாடகத்தின் மேக்கேதாட்டு அணைத் திட்டத்துக்கு அனுமதி வழங்குவது பற்றி விவாதிக்கப்படும் என்றும் அதன் தலைவா் எஸ்.கே. ஹல்தா் உறுதிபடக் கூறியுள்ளாா்.ஆணையக் கூட்டத்தில் மேக்கேதாட்டு அணை அனுமதி குறித்து, விவாதிக்கப் பொருள் நிரலில் சோ்த்த போதெல்லாம் தமிழக அரசுப் பிரதிநிதிகள் அதை எதிா்த்து வந்ததால், அதை விவாதிக்க முடியாமல் போய்விட்டது.

    இதுகுறித்து சட்டவிளக்கம் அறிய இந்திய அரசின் சட்ட அமைச்சகத்தை அணுகி விளக்கம் கேட்டதாகவும், அதன் சாா்பில் இந்திய அரசின் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா அளித்த விளக்கத்தில், காவிரி தொடா்பானஎந்தச் சிக்கலையும் விவாதித்து முடிவெடுக்கக்காவிரி மேலாண்மை ஆணைய த்துக்குக் கட்டற்ற அதிகாரம் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளதாகவும், அந்த அடிப்படையில் அக்கூட்டத்தில் மேக்கே தாட்டு அணை குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும் எனவும் ஹல்தா் கூறியுள்ளாா்.

    காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு, உச்ச நீதிமன்றத் தீா்ப்பில் உள்ளபடி தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிட ஆணையிடும் அதிகாரம் மட்டுமே உள்ளது. காவிரியில் புதிய நீா்த்தேக்கங்கள் கட்டுவதற்கு அனுமதி கொடுக்கும் அதிகாரம் துளியும் இல்லை.

    தமிழக அரசு உடனடியாக இந்தச் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு உரியவாறு எதிா்ப்புத் தெரிவிக்க வேண்டும். இதனைச் சுட்டிக்காட்டி ஜூன் 17- ஆம் தேதி நடைபெறவுள்ள ஆணையக் கூட்டத்துக்கு இடைக்காலத் தடை ஆணை பெற வேண்டும். ஒருவேளை அந்த ஆணையக் கூட்டம் நடந்தால் அதைப் புறக்கணிக்க வேண்டும். புதுச்சேரியும், கேரளமும் புறக்கணிக்குமாறு வேண்டு கோள் வைக்க வேண்டும்.

    இப்போதுள்ளகாவிரி ஆணையத்தைக் கலைத்து விட்டு, நடுநிலை தவறாத அலுவலா் தலைமையில், காவிரி நீரைப் பிரித்து வழங்கும் தன்னாட்சி அதிகாரம் கொண்ட புதிய மேலாண்மை ஆணையம் அமைத்திட இந்திய அரசை வலியுறுத்தும் வெகுமக்கள் போராட்டத்துக்குத் தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×