search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக அரசின் பயிற்சி சான்றிதழையும் அங்கீகரிக்க வேண்டும்- ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ வலியுறுத்தல்
    X

    ஓ.எஸ். மணியன், எம்.எல்.ஏ.

    தமிழக அரசின் பயிற்சி சான்றிதழையும் அங்கீகரிக்க வேண்டும்- ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ வலியுறுத்தல்

    • மாணவர்கள் இப்பதவிக்கான போட்டித் தேர்வு க்கு விண்ணப்பிக்க தகுதி யற்றவர்களாக ஆகியுள்ளார்கள்.
    • தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தேர்வு அறிவிப்பாணைகளை வெளியிட வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ். மணியன், எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த 29.7.22 அன்று அறிவித்த விளம்பர எண்.622, அறிவிப்பு எண்.18/2022-ன் படி, தமிழ்நாடு அரசுத் துறைகளில் 1089 சர்வேயர் பணியிடங்களுக்கான விளம்பரம் வெளியி டப்பட்டது.அந்த விளம்பரத்தில் கல்வித் தகுதியாக, இந்திய அரசின் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழை பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர்தேர்வா ணையம் அறிவிப்பு வெளியிட்டு ள்ளது.

    அந்த அறிவிப்பால், தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பயின்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் இப்பதவி க்கான போட்டித் தேர்வு க்கு விண்ணப்பிக்க தகுதி யற்றவர்களாக ஆகியுள்ளா ர்கள்.

    தமிழ் நாட்டிலேயே படித்து, அரசின் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழை பெற்றிருக்கின்ற தமிழக இளைஞர்களை, மேற்கண்ட வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்களாக ஆக்கியுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இந்த அறிவிக்கை.

    எனவே, சர்வேயர் பணியிட ங்களுக்காக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட அறிவிப்பி ல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பிக்கும் கால அளவை நீட்டிப்பு செய்தும் தமிழக அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயின்று சான்றிதழ் பெற்ற அனைத்து தமிழக மாணவர்களையும் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்களாக திருத்தம் செய்தும், புதிய அறிவிப்பினை வெளியிடுவதற்கு தி.மு.க அரசு உரிய ஆலோசனையை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்திற்கு வழங்க வேண்டும்.

    லட்சக்கணக்கான தமிழக மாணவர்கள் வேலைக்காக ஏங்கித் தவிக்கின்ற இன்றைய காலச் சூழ்நிலையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் இனிவரும் காலங்களில் நடத்துகின்ற தேர்வுகளை மிகுந்த கவனத்தோடு, தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தேர்வு அறிவிப்பாணைகளை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×