என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் மயக்கவியல்-அறுவை சிகிச்சை அரங்கம் குறித்து தேசிய கருத்தரங்கம்
- தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.
- வெளி மாநிலத்தை சேர்ந்த மயக்கவியல் தொழிற்நுட்ப மாணவ, மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த பையணூரில் விநாயகா மிஷன் கல்லூரி வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் மயக்கவியல் தொழிற்நுட்பம் மற்றும் அறுவை சிகிச்சை அரங்க தொழிற்நுட்ப பிரிவின் சார்பில், தேசிய மயக்கவியல் மற்றும் அறுவை சிகிச்சை அரங்க பிரிவு தொழிற்நுட்பவியலாளர்கள் தினத்தை முன்னிட்டு, தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சென்னை, சேலம், புதுச்சேரி மற்றும் பல்வேறு வெளி மாநிலத்தை சேர்ந்த மயக்கவியல் தொழிற்நுட்ப மாணவ, மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கருத்தரங்கில் மயக்கவியல், அறுவை சிகிச்சை அரங்க தொழிற்நுட்ப பிரிவுகளில் தற்போது ரோபோக்களின் பயன்பாடு அதிகமாக இருப்பது குறித்தும், அதை நோயாளிகளிடம் டிஜிட்டல் மூலம் எப்படி பயன்படுத்துவது என்பது குறித்த விளக்கங்களையும் மாணவர்களுக்கு அத்துறை சார்ந்த வல்லுநர்கள் எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில் டீன் பேராசிரியர் டாக்டர். செந்தில்குமார், இயக்குனர் ஆண்ட்ரூ ஜான் சில்வஸ்டர், டாக்டர்கள் கிருஷ்ணபிரசாத், கோகுல்ராம், அஸ்வந்த், ரேஷ்மா, நவீன்குமார் சேரன், பொறுப்பாளர் வினோத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.