என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கும்மிடிப்பூண்டியில் அனுமதியின்றி சேவல் சண்டை நடத்திய 4 பேர் கைது
Byமாலை மலர்8 Jun 2023 5:52 PM IST
- சேவல் சண்டை நடைபெற்று வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது.
- கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கண்ட 4 பேரையும் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டியில் சட்ட விரோதமாக பணம் வைத்து சேவல் சண்டை நடைபெற்று வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் நேற்று முன்தினம் வெட்டுகாலனி பகுதியில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்கு பணம் வைத்து சேவல் சண்டை நடத்திய மெதிப்பாளையத்தை சேர்ந்த சந்துரு (வயது 23), கம்மார்பாளையத்தை சேர்ந்த கலைமணி (30), மங்காவரத்தை சேர்ந்த அஜீத் (26) மற்றும் வெங்கடாதிரிபாளையத்தைச்சேர்ந்த லோகேஷ் (23) ஆகிய 4 பேரை மடக்கி பிடித்தனர்.மேலும் இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கண்ட 4 பேரையும் கைது செய்தனர்.
Next Story
×