search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவனியாபுரத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி- போலீசார் விசாரணை
    X

    அவனியாபுரத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி- போலீசார் விசாரணை

    • ஏ.டி.எம்.மையத்திற்கு நேற்று நள்ளிரவு 1 மணியளவில் சென்ற மர்மநபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர்.
    • அப்போது அலாரம் ஒலித்ததால் அதிர்ச்சி அடைந்த கொள்ளையர்கள் கொள்ளையடிக்கும் முயற்சியை கைவிட்டு தப்பி சென்று விட்டனர்.

    அவனியாபுரம்:

    மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருப்புக்கோட்டை சாலையில் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம்.மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏ.டி.எம்.மையத்திற்கு நேற்று நள்ளிரவு 1 மணியளவில் சென்ற மர்மநபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர்.

    அப்போது அலாரம் ஒலித்ததால் அதிர்ச்சி அடைந்த கொள்ளையர்கள் கொள்ளையடிக்கும் முயற்சியை கைவிட்டு தப்பி சென்று விட்டனர்.

    இதுபற்றி அறிந்த மும்பை வங்கி அதிகாரிகள் அவனியாபுரம் போலீஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு அங்கு கொள்ளை முயற்சி நடப்பதாக தெரிவித்தனர். அதன் பேரில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த கீரைத்துறை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பெத்துராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளை முயற்சி நடந்த ஏ.டிஎம். மையத்தை பார்வையிட்டு அங்கிருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

    மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து அதில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி உள்ளதா? என்பதை தெரிந்து கொண்டு விசாரணை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.

    மேலும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடைக்கப்பட்ட ஏ.டி.எம். மையத்தை மூடிவிட்டு சென்று விட்டனர்.

    இந்த சம்பவத்தில் கொள்ளையர்களின் முயற்சி பலிக்காததால் பல லட்சம் ரூபாய் தப்பியது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×