என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தண்ணீர் லாரி மோதி வாலிபர் பலி- ஹெல்மெட் அணிந்திருந்தும் தலைநசுங்கியது
- விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
அம்பத்தூர்:
வானகரம் அடுத்த நூம்பல் பகுதியை சேர்ந்தவர் ராமானுஜம்(வயது34). இவர் பாடியில் உள்ள தனியார் கம்பெனியில் மானேஜராக பணியாற்றி வந்தார். இன்று காலை 6.50 மணியளவில் ராமானுஜம் வழக்கம்போல் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டார்.
பாடி மேம்பாலம் அருகே வந்த போது பின்னால் அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தண்ணீர் லாரியின் சக்கரத்தில் சிக்கிய ராமானுஜம் சம்பவ இடத்திலலேயே பரிதாபமாக இறந்தார். அப்போது அவர் தலையில் ஹெல்மெட் அணிந்து இருந்தார். ஆனாலும் ஹெல்மெட் அவரது உயிரை காப்பாற்ற வில்லை. லாரியின் சக்கரத்தில் சிக்கிய வேகத்தில் ஹெல்மெட்டும் நசுங்கி உடைந்து போனது. ராமனுஜம் ஹெல்மெட் அணிந்த நிலையிலேயே இறந்து போனார். விபத்து நடந்ததும் லாரியை நிறுத்திவிட்டு அதன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
தகவல் அறிந்ததும் செங்குன்றம் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து ராமானுஜத்தின் உடலை கைப்பற்றி பிரேதபரி சோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.