என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஒரே நாள் இரவில் வங்கி ஊழியர் வீடு, தனியார் நிதி நிறுவனம் உள்பட 3 இடங்களில் 15 பவுன் நகை, ரூ. 3¾ லட்சம் கொள்ளை
- ஒரே நாள் இரவில் 2 வீடுகள், தனியார் நிதி நிறுவனத்தில் நடந்த கொள்ளை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தன்யாநகரை சேர்ந்தவர் கயத்தம்மாள். இவர் அங்குள்ள ஒரு வங்கியில் காசாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் மருத்துவ பரிசோதனைக்காக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் மதுரைக்கு சென்று விட்டார். இதேபோல் அதே பகுதியை சேர்ந்த சதீஷ்(வயது28) என்பவரும் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று நள்ளிரவு கயத்தம்மாள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்த மர்ம நபர்கள் அதில் இருந்த 10 பவுன் நகை, பணத்தை திருடினர். அங்கிருந்து வெளியேறிய கும்பல் அருகில் உள்ள சதீஷ் வீட்டுக்குள் புகுந்து 5 பவுன் நகை, ரூ.80 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர். மேலும் அதே பகுதியில் பூட்டியிருந்த சில வீடுகளிலும் அந்த கும்பல் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கதவை உடைக்க முடியாததால் அவர்கள் அதனை கைவிட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லி ஹவுசிங் போர்டு பகுதியில் தனியார் நிதி நிறுவனம் உள்ளது. நேற்று இரவு இங்கு வந்த கொள்ளை கும்பல் கதவை உடைத்து அலுவலகத்தில் இருந்த ரூ.3 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றது. இன்று காலை கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. சபரிநாதன் மற்றும் போலீசார் திருட்டு நடந்த வீடுகள், நிதி நிறுவனத்தில் நேரில் வந்து விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் கொள்ளை நடந்த இடங்களில் கைரேகைகளை சேகரித்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ஒரே நாள் இரவில் 2 வீடுகள், தனியார் நிதி நிறுவனத்தில் நடந்த கொள்ளை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையர்கள் பல நாட்கள் திட்டம் தீட்டி இதில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்