search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி அருகே கால்நடைகளுக்கு புல் அறுக்க சென்ற மூதாட்டியை கொன்று நகை கொள்ளை
    X

    திருச்சி அருகே கால்நடைகளுக்கு புல் அறுக்க சென்ற மூதாட்டியை கொன்று நகை கொள்ளை

    • தினமும் தனது கால்நடைகளுக்கு அக்கம்மாள் அருகில் உள்ள வயல் வெளிக்கு சென்று புல் அறுத்து வருவது வழக்கம்.
    • மூதாட்டியை கொன்று நகையை கொள்ளைடித்து சென்றது பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சோமரசம்பேட்டை அருகே உள்ள தாயனூர் சுள்ளாமணி கரை பகுதியைச் சேர்ந்தவர் மலை கொழுந்தன் (வயது 72), விவசாயி. இவரது மனைவி அக்கம்மாள் (65). இந்த தம்பதிக்கு சிறும்பாயி, அய்யினாள் என்ற 2 மகள்களும், வைரமணி என்ற மகனும் உள்ளனர்.

    இரண்டு மகள்களுக்கும் திருமணம் செய்து கொடுத்த நிலையில் அவர்கள் உள்ளூரிலேயே தனிக்குடித்தனம் வசித்து வருகிறார்கள். மகனுக்கும் திருமணமாகி அங்கேயே உள்ளார். இதனால் கணவன், மனைவி இருவரும் தனியாக வசித்து வந்தனர்.

    மேலும் அவர்களுக்கு விவசாய நிலம் இருந்தபோதிலும் இருவரும் ஆடு, மாடு வளர்த்து வருகிறார்கள். தினமும் தனது கால்நடைகளுக்கு அக்கம்மாள் அருகில் உள்ள வயல் வெளிக்கு சென்று புல் அறுத்து வருவது வழக்கம். நேற்றும் அதே போன்று மதியம் 3 மணிக்கு தன் வீட்டிற்கு அருகில் உள்ள சோளக்காட்டுக்கு புல் அறுக்க அக்கம்மாள் சென்றுள்ளார்.

    வழக்கமாக மாலையில் திரும்பி விடுவார். ஆனால் நேற்று இரவு வரை நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அவரது கணவர் மற்றும் மகன், மகள்கள், அக்கம்பக்கத்தினர் அவரை தேடிச்சென்றனர். விடிய, விடிய அவர் சென்ற பகுதிகளில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை அக்கமாளை தேடி மகள் வழி பேரன் தினேஷ் குமார் சென்றார். அப்போது வீட்டிலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மணிவேல் என்பவரது சோளக் காட்டுக்குள் தன்னுடைய பாட்டி பிணமாகக் கிடப்பதை பார்த்து கூச்சலிட்டார்.

    இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்து பார்த்த போது, அக்கம்மாள் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் செயின் மற்றும் தோடு, தாலி ஆகியவற்றை காணவில்லை. மேலும் அவர் அணிந்திருந்த மூக்குத்தியை கழட்ட முடியாததால் மூக்கிலேயே கத்தியால குத்தி அதை கழற்ற முற்பட்டுள்ளனர்.

    அப்படியும் கட்ட முடியாததால் மூக்குத்தி மட்டும் அவரது உடலுடன் இருந்துள்ளது. இதுகுறித்த தகவல் அறிந்து சோமரசம்பேட்டை இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து கொலையுண்ட அக்கம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித் குமார் மற்றும் ஜீயபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பரவாசுதேவன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மலைக் கொழுந்தன், அக்கம்மாள், அவருடைய மகன் வைரமணி ஆகியோர் தங்களுக்கு சொந்தமான வயல் மற்றும் வீடு ஆகியவற்றை விற்று வீட்டு குளித்தலை அய்யர்மலை அருகே உள்ள ஒரு கிராமத்தில் வயல் மற்றும் இடம் வாங்கி வீடு கட்டி வந்துள்ளனர்.

    நாளை அந்த வீட்டில் கிரகப்பிரவேசம் செய்து பால் காய்ச்சுவது என முடிவு செய்திருந்தனர். அதனால் இன்று அவர்கள் ஆடு, மாடு மற்றும் வீட்டுச் சாமான்கள் ஆகியவற்றை இன்று அந்த புதிய வீட்டிற்கு எடுத்துச் செல்வதாக இருந்தனர். இதற்கிடையேதான் அக்கம்மாள் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வெளியாட்கள் யாரும் நுழைய முடியாமல் பாதுகாப்பு அரணாக இருந்த கிராமத்தில் புகுந்த மர்ம நபர்கள் மூதாட்டியை கொன்று நகையை கொள்ளைடித்து சென்றது பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×