என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வளர்ப்பு தந்தை குடும்பத்தினரை தாக்கியதாக பெற்ற தந்தை மீது புகார் கொடுத்த இளம்பெண்
- வளர்ப்பு தந்தையின் உறவினர்களுக்கு ஆதரவாக பெற்ற தந்தை மீது பெண் புகார் கொடுத்திருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- போலீசார் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
குழித்துறை:
மார்த்தாண்டத்தை அடுத்த திக்குறிச்சி வில்லு மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 58). இவர் ஞாறான் விளையில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரது அண்ணன் பால்ராஜ். இவருக்கு திருமணமாகி 18 ஆண்டுகளாக குழந்தை இல்லை. இதனால் அவர் தம்பி விஜயகுமாரின் மகளை 18 ஆண்டுகளுக்கு முன்பு தத்தெடுத்து வளர்த்தார்.
இந்நிலையில் பால்ராஜ் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். கணவன் இறந்த பின்பு அவரது மனைவி வசுமதி, வளர்ப்பு மகள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். கடந்த 4-ந்தேதி வசுமதியும் இறந்து விட்டார். இதனால் அவர்கள் தத்தெடுத்த மகள் தனியாக வசிக்கும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து அண்ணன் பால்ராஜ் வீட்டில் தனியாக வசித்து வரும் மகளை அழைத்து செல்ல அவரது பெற்ற தந்தை விஜயகுமார் நேற்று இரவு 10 மணிக்கு, அண்ணன் பால்ராஜ் வீட்டிற்கு சென்றார். அங்கு இருந்த மகளை தன்னோடு அழைத்த போது அவரை அங்கிருந்த உறவினர்கள் அனுப்ப மறுத்தனர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு மூண்டது. இதில் விஜயகுமார் தாக்கப்பட்டார். இதுகுறித்து அவர் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளை அழைக்க சென்ற போது, கல்லுபாலத்தை சேர்ந்த பத்ரோஸ் ( 52 ), பயணம் பிரவீன் (22), சிதறால் ஜூலியட் (50), பயணம் விஜயகுமார் (52), நாகர்கோவில் ஐடா (42), கலா (43) உள்பட 10 பேர் சேர்ந்து தாக்கியதாகவும், தன்னிடம் இருந்த 7 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் ஸ்கூட்டியை பறித்து கொண்டதாகவும் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே விஜய குமார் மீது அவரது மகளும் தனியாக ஒரு புகார் கொடுத்தார். அதில் தான், தனது வளர்ப்பு தாயார் வசுமதி வீட்டில் வசித்து வருவதாகவும், தற்போது பிளஸ்-2 முடித்து மேற்படிப்பு படிக்க இருப்பதாகவும், இந்த நேரத்தில் நள்ளிரவில் வீடு புகுந்து கதவை உடைக்க முயற்சித்ததோடு, தனது உறவினர் சுரேஷ் என்பவரை கம்பியால் தாக்கி காயம் ஏற்படுத்தியதாகவும், புகாரில் கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் பெண்ணின் பெற்ற தந்தை விஜயகுமார், அபிஷேக், சசிகுமார், அனுஜ் உள்பட 10 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இருதரப்பையும் சேர்ந்த 20 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வளர்ப்பு தந்தையின் உறவினர்களுக்கு ஆதரவாக பெற்ற தந்தை மீது பெண் புகார் கொடுத்திருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்