search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா
    X

    கோவையில் தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா

    • திருவிழா நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • நாளை மகா கணபதி ஹோமம், முகூர்த்த கால், சிறப்பு அபிஷேகம், பம்பை உடுக்கை நிகழ்ச்சி நடக்கிறது.

    கோவை,

    கோவை அவினாசி ரோடு தண்டுமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா, நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    கோவை அவினாசி ரோடு உப்பிலிபாளையத்தில் பிரசித்தி பெற்ற தண்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதையொட்டி நாளை (திங்கட்கிழமை) மகா கணபதி ஹோமம், முகூர்த்த கால், சிறப்பு அபிஷேகம், கிராம சாந்தி, பம்பை உடுக்கை நிகழ்ச்சி நடக்கிறது.

    வருகிற 20-ந் தேதி அக்னிசாட்சி நிகழ்ச்சி, 21-ந் தேதி திருவிளக்கு வழிபாடு, வெள்ளி சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, 22-ந் தேதி குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, 23-ந் தேதி சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, 24-ந் தேதி திருவிளக்கு வழிபாடு, அன்ன வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, 25-ந் தேதி திருக்கல்யாண உற்சவம், மலர் பல்லக்கில் அம்மன் திருவீதி உலா, 26-ந் தேதி சக்தி கரகம், அக்னி சாட்டு புறப்பாடு நிகழ்ச்சி ஆகியன நடக்கிறது.

    27-ந் தேதி மகா அபிஷேகம், மஞ்சள் நீர், கொடி இறக்குதல், கம்பம் கலைத்தல், 28-ந் தேதி தமிழில் லட்சார்ச்சனை, 30-ந் தேதி சங்காபிஷேகம், வசந்த உற்சவம், ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. மேலும் திருவிழா காலங்களில் தினமும் காலை 7 மணிக்கு அபிஷேக பூஜைகளும், மாலை 4 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜைகளும் நடைபெறுகிறது. தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளது.

    Next Story
    ×