என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கயத்தாறு அருகே விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி
- பயிற்சியில் தமிழக முதல்-அமைச்சரின் மானாவாரியின் நில மேம்பாட்டு இயக்கம் என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
- உதவி மேலாண்மை அலுவலர் பிரான்சிஸ், பொருட்களின் மதிப்பு கூட்டு விற்பனை செய்தல் குறித்தும் பல்வேறு வழிமுறைகளையும் எடுத்து கூறினார்.
கயத்தாறு:
கயத்தாறு வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தின் சார்பில் தெற்கு வண்டானம் கிராமத்தில் விவசாயிகளுக்கான தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமை கயத்தாறு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ் ஆணைப்படி அட்மா மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.
இந்த பயிற்சியில் தமிழக முதல்-அமைச்சரின் மானாவாரியின் நில மேம்பாட்டு இயக்கம் என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சிக்கு தெற்கு வண்டானம் ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ் தலைமை தாங்கினார். அட்மா திட்ட வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு தலைவர் ஆறுமுக பாண்டியன் முன்னிலை வகித்தார்.
இந்த பயிற்சியில் வாகைகுளம் ஸ்காட் வேளாண்மை அறிவியல் மையத்தை சேர்ந்த வேளாண் வல்லுநர் முருகன் கோடை உழவு மற்றும் அடி உரம் இடுதல், வேப்பம் புண்ணாக்கு, மண் பரிசோதனை அடிப்படையில் உரம் இடுதல் உட்பட பல்வேறு சாகுபடிகள் குறித்து விளக்கி கூறினார்.
மேலும் இயற்கை பண்ணையம் தரிசு நில மர சாகுபடி குறித்து வேளாண் வணிகத்துறையை சேர்ந்த உதவி மேலாண்மை அலுவலர் பிரான்சிஸ், தமிழக அரசு செயல்பட்டு வரும் தமிழக சேமிப்புக் கிடங்கு உழவர் சந்தை விவசாயிகள், பொருட்களின் மதிப்பு கூட்டு விற்பனை செய்தல் குறித்தும் பல்வேறு வழிமுறைகளை எடுத்து கூறினார்.
உதவி வேளாண்மை அலுவலர் முத்துமாரி கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றி விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார்.
மானாவாரி பயிர்களுக்கான சாகுபடி தொழில்நுட்பம் குறித்து காணொளி காட்சி மூலம் விளக்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமில் 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர் மணிகண்டன், துணை வேளாண்மை அலுவலர் முத்துக்குமார், காளிராஜ் மற்றும் வட்டார தொழில்நுட்ப மேலாளர் சாலமன் நவராஜ்பொற்செல்வன், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ரத்தினம்பால், ஜெயலட்சுமி மற்றும் உழவர் நண்பர்கள் முத்துப்பாண்டியன், பொன்னுச்சாமி பாண்டியன் ஆகியோர் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்