search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூரில் பயங்கரம்:  காவலாளியை வெட்டி கொன்ற கொள்ளையர்கள்
    X

    கடலூரில் பயங்கரம்: காவலாளியை வெட்டி கொன்ற கொள்ளையர்கள்

    • பழைய இரும்பு பொருட்கள் கடையில் காவலாளியாக வேலைபார்த்து வந்தார்.
    • சிகிச்சை பலனின்றி இன்று காலை முருகையன் இறந்தார்.

    கடலூர்:

    கடலூர் அருகே உள்ள குமாரபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகையன் (வயது 59). இவர் தோட்டப்பட்டு ஆஞ்சநேயர் கோவில் எதிரே உள்ள ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு பொருட்கள் கடையில் காவலாளியாக வேலைபார்த்து வந்தார். சம்பவத்தன்று முருகையன் இரவு நேர பணிக்கு வந்தபோது பழைய இரும்பு கடையில் மர்மநபர்கள் திருடிக்கொண்டிருந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த முருகையன் அவர்களை தட்டிக்கேட்டார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஆத்திரம் அடைந்த மர்மநபர்கள் அங்கு கிடந்த இரும்பு கம்பியால் தாக்கினர். பின்னர் மண்வெட்டியால் வெட்டினர். இதில் முருகையன் ரத்தவெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். இதனை பார்த்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அந்த சமயம் கடையின் உரிமையாளர் ஆனந்த் அங்கு வந்தார். ரத்தவெள்ளத்தில் உயிருக்குபோராடிய முருகையனை தூக்கிக்கொண்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவரது நிைலமை மோசமானது. எனவே முருகையன் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை முருகையன் இறந்தார்.

    இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் கொலைமுயற்சி வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். போலீஸ் தேடுதல் வேட்டையில் 2 பேர் சிக்கினர். விசாரணையில் பிடிபட்ட 2 பேர்தான் முருகையனை கொலை செய்தது தெரியவந்தது. அவர்கள் தோட்டப்பட்டு பழைய காலனியை சேர்ந்த திவாகரன் (19), நத்தப்பட்டு காலனியை சேர்ந்த ஜின்னா என்கிற தமிழ்வல்லவன் (20) என தெரியவந்தது. இவர்களை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே இவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது முருகையன் இறந்து போனதால் 2 பேர் மீது கொலைவழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×