search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3-வது நாளாக ரேஷன்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    ஒரத்தநாடு தாலுகா அலுவலகம் முன்பு நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    3-வது நாளாக ரேஷன்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

    • சரியான எடையில் தரமான பொருட்கள் அனைத்தும் பொட்டலமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக்கடை பணியாளர்கள் 4 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர்.
    • ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக 406 கடைகள் திறக்கப்படவில்லை. 480 கடைகள் மட்டுமே திறக்கபட்டது.

    தஞ்சாவூர்:

    பொது வினியோக திட்டத்தி ற்காக தனித்து றையை உருவாக்க வேண்டும், 5 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்ட 17 சதவீத அகவிலை ப்படியையும் சேர்த்து அரசு பணியாளர்களுக்கு வழங்கக்கூடிய 31 சதவீத அகவிலைப்படியை, நியாய விலைக்கடை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும், சரியான எடையில் தரமான பொருட்கள் அனைத்தும் பொட்டலமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக்கடை பணியாளர்கள் 4 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர்.

    அதன்படி தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக நேற்று ரேஷன்கடை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    அதன் தொடர்ச்சியாக இன்று 3-வது நாளாகவும் அவர்களது போராட்டம் தொடர்ந்தது.

    தஞ்சை தாலுகா அலுவலகம் முன்பு இன்று நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இதற்கு வட்ட தலைவர் வைத்திலிங்கம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் குழந்தைசாமி, தமிழ்சித்தன், திருமேனிபூங்குழலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் அறிவழகன், மாவட்ட செயலாளர் கரிகாலன், மாவட்ட பொருளாளர் ராமலிங்கம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    மாநில துணை தலைவர் ராமலிங்கம் பேசும்போது:-

    தஞ்சை மாவட்டத்தில் 1,184 ரேஷன்கடைகள் உள்ளன. இதில் இன்று 886 கடைகள் திறந்திருக்க வேண்டும். ஆனால் ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக 406 கடைகள் திறக்கப்படவில்லை. 480 கடைகள் மட்டுமே திறக்கபட்டது என்றார்.

    இதேப்போல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருவிடைமருதூர், பாபநாசம், பேராவூரணி, கும்பகோணம் உள்பட மற்ற 8 தாலுகா அலுவலகம் முன்பும் நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×