என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
உடன்குடியில் தேங்கிய மழை நீர் அகற்றம்
- கனமழையால் உடன்குடி பேரூராட்சிக்குட்பட்ட பஜார் வீதிகள் மற்றும் பல இடங்களில் மழை நீர் தேங்கி கிடந்தது.
- அமைச்சர் உத்தரவின்பேரில் உடன்குடிபேரூராட்சி சார்பில் கனரக எந்திரங்கள் மூலம் மழை நீர் அகற்றும் பணி பேரூராட்சி முழுவதும் நடைபெற்றது.
உடன்குடி:
உடன்குடி பகுதியில் விட்டு விட்டு பெய்து வரும் கனமழையால் உடன்குடி பேரூராட்சிக்குட்பட்ட பஜார் வீதிகள் மற்றும்பல இடங்களில் மழை நீர் தேங்கி கிடந்தது.இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் வாகனஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடுகள்நோய்பரவும் சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் இவ்வழியாக தண்டுபத்து சென்ற தமிழக மீன்வளம் மீனவர் நலன்மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்த உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் உடன்குடிபேரூராட்சி சார்பில் கனரக எந்திரங்கள் மூலம் மழை நீர் அகற்றும் பணி பேரூராட்சி முழுவதும் நடைபெற்றது.இப்பணிகளை பேரூராட்சி செயல் அலுவலர் பிரபா, பேரூராட்சி தலைவி ஹூமைரா அஸ்ஸாப், பேரூராட்சி துணைத்தலைவர் மால்ராஜேஷ், பேரூராட்சி உறுப்பினர்கள் அஸ்ஸாப் கல்லாசி, பஷீர், முகம்மது ஆபித், மும்தாஜ், ஜான்பாஸ்கர் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.