என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருத்துறைப்பூண்டி ரெயில் நிலையத்தில் முன்பதிவு மையத்தை ஞாயிறுகளிலும் திறக்க வேண்டும்
- தினமும் காலை 8 முதல் மதியம் 2 மணி வரை பயணிகள் டிக்கெட்டு முன்பதிவு செய்து வருகின்றனர்.
- இந்த முன்பதிவு மையம் ஞாயிற்றுகிழமைகளில் செயல்படாமல் உள்ளது.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்ட ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வக்கீல் நாகராஜன், மாவட்ட செயலாளர் எடையூர் மணிமாறன் ஆகியோர் தென்னக ரெயில்வே பொது மேலாளர், திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருத்துறைப்பூண்டி ரெயில் நிலையத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அகல ரெயில் பாதை ஏற்படுத்தப்பட்டு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரெயில்களில் அப்பகுதி மக்கள்பயணம் செய்ய ஏதுவாகரெயில் நிலையத்தில் முன்பதிவு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் பயணிகள் தினமும் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.
மேலும், இங்கு தட்கல் ரெயில் டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த முன்பதிவு மையம் ஞாயிற்று கிழமைகளில் செயல்படாமல் உள்ளது.
இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் முன்பதிவு செய்ய முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளா கின்றனர்.
எனவே, பயணிகளின் நலன் கருதி ஞாயிற்றுகி ழமைகளிலும் முன்பதிவு மையத்தை திறக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.