என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கொலுபொம்மைகள் விற்பனையை கலெக்டர் தொடங்கி வைத்தார்
- இக்கண்காட்ச்சியில் இடம்பெற்றுள்ள அனைத்து கொலு பொம்மைகளுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
- இக்கண்காட்சி வாயிலாக ரூ.20 லட்சம் விற்பனை எதிர்பார்க்கப்படுகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலைய வளாகத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனையினை மாவட்ட கலெக்டர்தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் குத்துவி ளக்கேற்றி விற்பனையை தொடங்கி வைத்தார் .
அப்போது அவர் கூறியதாவது:-
தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு நிறுவனமான பூம்புகார் விற்பனை நிலையம் உள்வளாகத்தில் "கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை" தொடங்கப்பட்டுள்ளது.
முக்கியமான பண்டிகை களில் ஒன்றான நவராத்திரி பண்டிகை அனைவராலும், மிகவும் பக்தியுடனும், மகிழ்வுடனும் கொண்டாடப்படுவதாகும்.
தமிழ்நாட்டில் இவ்விழா "நவராத்தரி" என்ற பெயரிலும் கர்நாடகத்தில் "தசரா" என்ற பெயரிலும் குஜராத்தில் "தாண்டியா" என்ற பெயரிலும்மேற்கு வங்கத்திலும் வடஇந்தி யாவின் பிறபகுதிகளிலும் "துர்கா பூஜை" என்ற பெயரிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
பூம்புகார் என்ற பெயரில் புகழ்பெற்று விளங்கும் தமிழ்நாடு அரசு நிறுவனமான, தமிழ்நாடு கைத்திறத்தொழல்கள் வளர்ச்சிக் கழகம், கைவினைஞர்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்த பல்வேறு கண்காட்சிகளை நடத்தி வருகிறது.
இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு கொலு பொம்மைகளை வழங்குவதற்காக பூம்புகார் நிறுவனம் ஆண்டுதோறும் "கொலு பொம்மைகள் கண்காட்சி" என்றபெயரில் சிறப்பானதொரு கண்காட்சி யினை நடத்தி வருகிறது.
இக்கண்காட்சி அடுத்த மாதம் 6-ந் தேதி வரை (ஞாயிறு உட்பட) தினசரி காலை 10 மணி முதல் இரவு 8 மணி முடிய நடைபெற உள்ளது.
இக்கண்காட்ச்சியில் இடம்பெற்றுள்ள அனைத்து கொலு பொம்மைகளுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
அனைத்து கடன் அட்டைகளும் எவ்வித சேவைக்கட்டணமுமின்றி ஏற்று கொள்ளப்படும்.
இக்கண்காட்சி வாயிலாக ரூ.20 லட்சம் விற்பனை எதிர்பார்க்கப்படுகிறது.
இக்கொலு கண்காட்ச்சி யில் களிமண், காகிதக்கூழ், பளிங்குத்தூள், மரம், கருங்கல், ரேடியம், கொல்கத்தா களிமண் போன்ற பலவகை கைவினைப்பொருட்களினால் தயாரிக்கப்பட்ட கொலு பொம்மைகள் சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்ப ட்டுள்ளன.
அந்த வகையில் கொலு ப்படி செட், கிரகப்பிரவேச செட், வேதமூர்த்திகள், அஷ்டதிக் பாலகர்கள், அஷ்ட பைரவர்கள், நவகிரகங்கள், அத்திவரதர் நின்ற கோலம், தசாவதாரம் செட், அஷ்டலெட்சுமி செட், விநாயகர் செட், குபேரன் செட், கிரிவலம் செட், திருமலை செட், கோபியர் செட், தர்பார் செட், மைசூர் தசரா செட், கிரிக்கெட் விளையாட்டு செட், சங்கீத மும்மூர்த்திகள் செட், கருட சேவை செட், வைகுண்டம் செட், துர்கா பூஜை செட், அஷ்ட வராகி செட், நவதுர்க்கை செட், பூதகணங்கள், கிருஷ்ணர் விளையாட்டு செட் போன்ற சிறப்பான செட் பொம்மைகள் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ராஜஸ்தான், கொல்கத்தா, புனே, புதுடெல்லி போன்ற பிற மாநிலங்களிலிருந்தும் தருவிக்கப்பட்டு விற்ப னைக்கு வைக்கப்ப ட்டுள்ளன.
சிறப்பு பொம்மைகளாக கல்கத்தா களிமண் பொம்மை கள், சென்னப்பட்டினா மர பொம்மைகள், ஒட்டிகோப்பா பொம்மைகள், டிரஷிங் டால்ஸ் போன்ற புதிய வகை பொம்மைகளும் விற்பனையில் இடம் பெற்றுள்ளன.
எனவே தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் இதனை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) மரு.என்.ஓ.சுகபுத்ரா., தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர்சரவணகுமார், பூம்புகார் விற்பனை நிலையம் மேலாளர்சக்தி தேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்