search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயிலாடும்பாறை அகழ்வாராய்ச்சி பகுதியை கலெக்டர் பார்வையிட்டனர்
    X

    மயிலாடும்பாறை அகழ்வாராய்ச்சி பகுதியை கலெக்டர் பார்வையிட்டனர்

    • கல்வெட்டு மற்றும் பாறை ஓவியங்கள் மற்றும் மயிலாடும்பாறை அகழ்வாராய்ச்சி ஆகிய இடங்களை பார்வையிடப்பட்டது.
    • அவற்றை பாதுகாக்கவும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா தொகரப்பள்ளி, ஐகுந்தம் பகுதிகளில் "காணத்தக்க கிருஷ்ணகிரி விழிப்புணர்வு சுற்றுலாத் திட்டத்தின்" கீழ் நடுகற்கள், வணிகக்குழு கல்வெட்டு மற்றும் பாறை ஓவியங்கள், மயிலாடும்பாறை அகழ்வாராய்ச்சி ஆகிய பகுதிகளை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையிலான விழிப்புணர்வு குழுவினர் நேற்று பார்வையிட்டனர்.

    இது குறித்து கலெக்டர் கூறுகையில், "காணத்தக்க கிருஷ்ணகிரி என்ற விழிப்புணர்வு சுற்றுலாத் திட்டத்தை" கடந்த மாதம் 29ம் தேதி முதல் பயணமாக மல்லசந்திரம் கற்திட்டைகள் பார்வையிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று (நேற்று) சனிக்கிழமை தொகரப்பள்ளி நடுகற்கள், ஐகுந்தம் வணிகக்குழு கல்வெட்டு மற்றும் பாறை ஓவியங்கள் மற்றும் மயிலாடும்பாறை அகழ்வாராய்ச்சி ஆகிய இடங்களை பார்வையிடப்பட்டது.

    இதனால், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பல்வேறு வரலாற்று சின்னங்கள், கலாச்சார பெருமை கொண்ட இடங்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அனைவரும் அறிந்து கொள்ளவும், அவற்றை பாதுகாக்கவும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    வருகிற 13-ந் தேதி காலை அஞ்செட்டி பகுதியில் உள்ள மீட்டர் அருவி மற்றும் சில சுற்றுச்சூழல் தலங்களை மேற்படி குழு பார்வையிட உள்ளது என்றார். இந்த பயணத்தின் போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) வந்தனாகார்க், அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், சுற்றுலா அலுவலர் கஜேந்திரன், தாசில்தார் திலகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணி, பாலாஜி மற்றும் கிருஷ்ணகிரி வரலாற்று ஆவணக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×