search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மக்களை தேடி மருத்துவ திட்ட பயனாளிகளின் வீட்டிற்கு சென்று நலம் விசாரித்த கலெக்டர்
    X

    பயனாளிகளின் வீட்டிற்கு சென்று கலெக்டர் மகாபாரதி நலம் விசாரித்தார்.

    மக்களை தேடி மருத்துவ திட்ட பயனாளிகளின் வீட்டிற்கு சென்று நலம் விசாரித்த கலெக்டர்

    • நீரிழிவு நோய் 18 வயது மேற்பட்டவர்களுக்கு பெண் சுகாதார தன்னார்வலர்கள் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது.
    • ஆரோக்கியமான உணவு முறைகள், எளிய உடற்பயிற்சி முறைகள் பற்றி ஆலோசனை வழங்கினார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நிம்மேலி ஊராட்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் பயனாளிகள் குறித்து மயிலாடுதுறை கலெக்டர் மகாபாரதி மருத்துவம் குறித்து கேட்டறிந்து நலம் விசாரித்தார் அப்போது நிம்மேலி கிராமத்தில் வசிக்கும் கலியமூர்த்தி (வயது 85) சசிகலா 50 ஆகியோரது வீட்டிற்கு நேரடியாக சென்று மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் பணி புரியும் செவிலியர்கள் நேரடியாக வீட்டிற்கு வந்து ரத்த கொதிப்பு சர்க்கரை நோய் குறித்து கண்டறிந்து மருந்து மாத்திரைகள் வழங்குகிறார்களா என கேட்டறிந்தார்.

    தொடர்ந்து அப்பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் குழந்தைகளிடம் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

    அப்போது கலெக்டர் கூறுகையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் மயிலாடுதுறை மாவட்டத்தில் 73508

    பயனாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்களின் வீட்டிற்கே சென்று உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் 18 வயது மேற்பட்டவர்களுக்கு பெண் சுகாதார தன்னார்வலர்கள் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது.

    தொற்றா நோய்கள் அம்மைகளை எதிர்கொள்ளும் விதமாக நோயாளிகளின் இல்லத்திற்கு நேரில் சென்று சில அத்தியாவசியமான சுகாதார சேவைகள் வழங்கப்படுகிறது.

    மேலும், தொடர் கண்காணிப்பு செய்வதன் மூலம் இரண்டு மாதங்களுக்கு நோயாளிகள் பயன்பெறும் விதமாக வீட்டிற்கே சென்று மருந்துகள் வழங்கப்படுகின்றது.

    இரண்டு மாதத்திற்கு ஒருமுறை பெண் சுகாதார தன்னார்வலர்கள் (WHV) நோயாளிகளை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவர் பரிசோதனை செய்ய பரிந்துரை செய்கின்றனர்.

    இது தவிர, அனைவருக்கும் ஆரோக்கியமான உணவு முறைகள், எளிய உடற்பயிற்சி முறைகள்பற்றி எடுத்துரைத்து ஆலோச னைகள் வழங்குகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்ட துணை (சுகாதாரம்) இயக்குனர் அஜித்பிரபு குமார், தாசில்தார் செந்தில்குமார்

    வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்மோகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோவன் சரவணன் டாக்டர் பத்மபிரியவர்தினி சுகாதார மேற்பார் வையாளர் ராமோகன் சுகாதார ஆய்வாளர் ரவிக்குமார் ஊராட்சி தலைவர் வசந்தி செவிலியர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×