என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சாத்தான்குளத்தில் கடையின் முன்பு கொட்டப்பட்ட கட்டிட கழிவுகளை அகற்ற வேண்டும் - வியாபாரிகள் கோரிக்கை
- சாத்தான்குளம் மெயின் பஜாரில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு புதியதாக கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது.
- அந்த கால்வாய் கட்டுமானப்பணியின் கழிவுகளை அருகே உள்ள ஒரு கடையின் வாசலில் போட்டுவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் மெயின் பஜாரில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு புதியதாக கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது. இந்த பணிக்காக சாத்தான்குளம் மெயின் பஜாரில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்து சிறு, குறு தெருக்கள் வழியாக மிகவும் சிரமத்துடன் சென்று வந்ததாக பொதுமக்கள் புகார் கூறினர்.
இந்த நிலையில் பொதுமக்கள், வியாபாரிகள் எதிர்ப்பு காரணமாக கடந்த 19-ந்தேதி கழிவு நீர் கால்வாய் பணிகள் அவசர கதியில் முடிக்கப்பட்டு பின்னர் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் அந்தப் பணியினை செய்த ஒப்பந்ததாரர் அந்தப் கால்வாய் கட்டுமானப் பணியின் கழிவுகளை அருகே உள்ள ஒரு கடையின் வாசலில் போட்டுவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அந்த கடையை திறக்க வந்த வியாபாரி கடந்த 4 நாட்களாக கடையை திறக்க முடியாமல் மிகவும் அவதியடைந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து வியாபாரிகள் சங்க செயலாளர் மதுரம் செல்வராஜ் கூறுகையில், இந்த கழிவுநீர் கால்வாய் பணிக்காக வியாபாரிகள் ஒரு மாத காலத்திற்கு மேலாக போக்குவரத்து நிறுத்தப்பட்டதினால் அவதி அடைந்து வந்த நிலையில் தற்போது பணிகள் முடிந்தும் அங்குள்ள கடையின் வாசலில் கால்வாய் கட்டுமான கழிவுகளை கொட்டப்பட்டு இருந்ததால் வியாபாரிகள் அவதி அடைந்து வருவது மிகவும் வேதனைக்குரியது. எனவே இந்த விவகாரத்தில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கட்டிட கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.