என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெற உழைக்க வேண்டும்- அமைச்சர் சக்கரபாணி அறிவுரை
- தேர்தல் அறிக்கையில் கூறிய 80 சதவீத திட்டங்கள் தற்போது அமல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் கூட்டணியினர் வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் தேவராஜ் மகாலில் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், சாந்தமூர்த்தி, மகேந்திரன், நரசிம்மன், செல்வம், சுப்பிரமணி, கோவிந்தன், தனசேகரன், குமரேசன், ரஜினிசெல்வம், அறிஞர், குண.வசந்தரசு, பேரூர் கழக செயலாளர்கள் பாபு சிவக்குமார், தம்பிதுரை, பாபு, வெங்கட்டப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ் வரவேற்றார்.
கூட்டத்தில் தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சரும், கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான சக்கரபாணி பங்கேற்று, சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தேர்தல் அறிக்கையில் கூறிய 80 சதவீத திட்டங்கள் தற்போது அமல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மக்கள் அனைவருக்கும் தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து எடுத்து கூற வேண்டும். தற்போது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
தகுதியுள்ள அனைவருக்கும் இந்த திட்டத்தின் பயன் சென்று சேரும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள அனைவரும் இந்த ஆட்சியில் ஏதோ ஒரு வகையில் பயனடைந்து வருகிறார்கள். ஆகவே வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் கூட்டணியினர் வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே தலைவர் மு.க.ஸ்டாலின் விருப்பம்.
அதை நிறைவேற்றிட வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது. தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெற அனைவரும் உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் செங்குட்டுவன், சுகவனம், முன்னாள் எம்.பி. வெற்றிச்செல்வன், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், மாநில மகளிர் அணி பிரச்சார குழு செயலாளர் டாக்டர்.மாலதி நாராயணசாமி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சந்திரன், சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவட்ட பொருளாளர் கதிரவன், நகராட்சி தலைவர் பரிதா நவாப், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், தி.மு.க. பிரமுகர் தொழில் அதிபர் கே.வி.எஸ். சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்