search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளாஸ்டிக் பை தடைச் சட்டத்தை அரசு முறைப்படுத்த வேண்டும்
    X

    தஞ்சை மாநகராட்சி மேயர் சண் ராமநாதனை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் தலைவர் விக்கிரமராஜா சந்தித்து பேசினார்.

    பிளாஸ்டிக் பை தடைச் சட்டத்தை அரசு முறைப்படுத்த வேண்டும்

    • சிறு, குறு உற்பத்தியாளா்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை நெகிழிப் பையில் போட்டு தருகின்றனா்.
    • பன்னாட்டுப் பொருள்களுக்கும் தடை விதிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் மேயா் சண். ராமநாதனை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா சந்தித்து பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்க ளுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    சிறு, குறு உற்பத்தியாளா்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை நெகிழிப் பையில் போட்டு தருகின்றனா். இதுதொடா்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டம் காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு உகந்ததாக இருக்கிறது. உற்பத்தி பொருள்களின் கவரிலேயே குறியீட்டு பெயா் இருக்க வேண்டுமானால், குறைந்தது ரூ. 50 லட்சம் முதலீடு செய்தால்தான் தொழில் செய்ய முடியும். இதை மகளிா் சுய உதவிக் குழுவினா், சாதாரண உற்பத்தியாளா்களால் செய்ய முடியாது.

    பெரு நிறுவனங்களின் உற்பத்தி பொருள்களுக்கு ஒருமுறை பயன்படுத்தப்படும் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது.

    பன்னாட்டு நிறுவனங்க ளுக்கு ஆதரவாகவும், உள்ளூா் நிறுவனங்களுக்கு எதிராகவும் செயல்பட்டால், உள்நாட்டு வணிகம் முழுமையாக முடங்கிவிடும். எனவே, இச்சட்டத்தை அரசு முறைப்படுத்த வேண்டும்.

    சுழற்சி முறையில் 75 மைக்ரான் நெகிழிக்கு ஸ்டிக்கா் ஒட்டி விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும். அதில், அச்சிட்டுத்தான் விற்பனை செய்ய வேண்டும் எனக் கூறினால், எங்களால் இயலாத விஷயம். எங்களுக்கு உத்தரவிடும் அரசு, பன்னாட்டுப் பொருள்களுக்கும் தடை விதிக்க வேண்டும். இல்லாவிட்டால், காா்ப்பரேட் நிறுவனங்களால்தான் வாழ முடியும்;

    சாமானிய வணிகா்களால் வாழ முடியாத நிலை ஏற்படும்.

    தஞ்சை வண்டிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள கடை வியாபாரிகளுக்கு சிறு, சிறு பிரச்னைகள் உள்ளன. இதை சரி செய்து தருவதாக மேயா் கூறியுள்ளாா்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது, மேயா் சண். ராமநாதன், பேரமைப்பு நிா்வாகிகள் உடனிருந்தனா்.

    Next Story
    ×