search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வள்ளியூரில் வக்கீலை அரிவாளால் வெட்டியது கூலிப்படையினர்- போலீசார் விசாரணையில் திடுக் தகவல்
    X

    வள்ளியூரில் வக்கீலை அரிவாளால் வெட்டியது கூலிப்படையினர்- போலீசார் விசாரணையில் திடுக் தகவல்

    • மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் ஜோசப் ராஜஜெகனை அரிவாளால் வெட்டினர்.
    • கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் வள்ளியூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    நெல்லை:

    வள்ளியூர் காமராஜர் முதல் தெருவை சேர்ந்தவர் ஜோசப் ராஜஜெகன் (வயது 46). வக்கீல். இவர் நேற்று காலை வள்ளியூர் மெயின் ரோட்டில் உள்ள தனது அலுவலகத்துக்கு வந்து கதவை திறந்து கொண்டிருந்தார்.

    அரிவாள் வெட்டு

    அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் திடீரென அவரை அரிவாளால் வெட்டினர். பின்னர் 3 பேரும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். இதில் 2 பேரை பொதுமக்கள் பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் நெல்லை அருகே உள்ள மூன்றடைப்பு பேரின்பபுரத்தை சேர்ந்த கார்த்திக் (22), பிரவின் ராஜா (22) ஆகியோர் என்பதும், தப்பி சென்றவர் ஆனந்தராஜ் (40) என்பதும் தெரியவந்தது.

    கூலிப்படையினர்

    அரிவாள் வெட்டில் ஜோசப் ராஜஜெகனின் தலை மற்றும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் வள்ளியூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    கைது செய்யப்பட்ட 2 பேரும் பணத்திற்காக இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. கடந்த வாரம் ஜோசப் ராஜஜெகனை இந்த கும்பல் வெட்டுவதற்காக வெள்ளை நிற காரில் வந்துள்ளனர். ஆனால் சில காரணங்களால் அவர்கள் திரும்ப சென்றுள்ளனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே காரில் வந்த கும்பல் பேரின்பபுரத்திற்கு சென்றுள்ளனர். இது அங்குள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகி உள்ளது. இதனை கைப்பற்றிய போலீசார் வக்கீலை எதற்காக இந்த கும்பல் கொலை செய்ய முயன்றனர். முன் விரோதம் காரணமாக நடைபெற்றதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் தப்பிச் சென்ற ஆனந்தராஜ் தான் இவர்களை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. எனவே அவரை பிடித்தால் தான் உண்மையான கார ணம் தெரியவரும் வரும் போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட 2 பேரையும் காவலில் எடுத்து விசா ரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

    வள்ளியூரில் மூத்த வழக்கறிஞர் ஜோசப் ராஜ ஜெகனை அவரது அலுவலகத்தில் வைத்து நேற்று கூலிப்படையினர் வெட்டியதை கண்டித்தும், அவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய கோரியும் வள்ளியூர் மற்றும் நாங்குநேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் வக்கீல்கள் இன்று கோர்ட்டுகளை புறக்கணித்தனர்.இதனால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×