search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முடிக்கப்பட்டுள்ள பணிகளை அமைச்சர் ஆய்வு
    X

    ஸ்டெம் பூங்காவை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டார்.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முடிக்கப்பட்டுள்ள பணிகளை அமைச்சர் ஆய்வு

    • ஆம்னி பஸ் நிலையம் கட்டும் பணி ரூ.10.46 கோடி மதிப்பில் நடந்து முடிந்துள்ளன.
    • காந்திஜி வணிக வளாகத்தை மேம்படுத்தும் பணி உள்பட 10 பணிகள் நடந்து முடிந்துள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.

    இதில் புதிய பஸ் நிலையம் அருகே ஆம்னி பஸ் நிலையம் கட்டும் பணி ரூ.10.46 கோடி மதிப்பில் நடந்து முடிந்துள்ளன.

    இதேபோல் தஞ்சை அருளானந்த நகரில் ரூ.11.50 கோடியில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் பூங்கா

    (ஸ்டெம் பூங்கா), ரூ.7.32 கோடி மதிப்பில் மாநகராட்சி பள்ளிகளை சீர்மிகு பள்ளிகளாக மாற்றுதல், ரூ.15.61 கோடி மதிப்பில் காந்திஜி வணிக வளாகத்தை மேம்படுத்தும் பணி உள்பட 10 பணிகள் நடந்து முடிந்துள்ளது.

    இந்தப் திட்டங்களை வருகிற 27-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

    இந்த நிலையில் நடந்து முடிந்த பணிகளை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் , மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) செந்தில்குமாரி, ஆணையர் சரவணகுமார், துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×