search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான பஞ்சாயத்து ராஜ் அதிகாரங்களை முழுமையாக வழங்க வேண்டும்
    X

    கூட்டத்தில் மாநிலத் தலைவர் முனியாண்டி பேசினார்.

    ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான பஞ்சாயத்து ராஜ் அதிகாரங்களை முழுமையாக வழங்க வேண்டும்

    • அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தினை செயல்படுத்த இ டெண்டர் முறையினை கைவிட்டு அந்தந்த ஊராட்சி மூலமே செயல்படுத்த ஆவணம் செய்ய வேண்டும்.
    • வாட்ஸ்அப் குழு ஆரம்பித்து கண்காணிக்கும் பொருட்டு ஏற்படும் இடர்பாடுகளை அறிந்து அம்முடிவை கைவிட வேண்டும்.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலத்தில் பாபநாசம் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் கூட்டமைப்பு தலைவர் திருமண்டங்குடி பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக கூட்டமைப்பு செயலாளர் கோவிந்தன்நாட்டு சேரி ஜெயசங்கர் வரவேற்றார். மாவட்ட கூட்டமைப்பு தலைவர் பாஸ்கர், மாவட்ட கூட்டமைப்பு செயலாளர் வெங்கடேசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கூட்டமைப்பின் மாநில தலைவர் முனியாண்டி கலந்துகொண்டு சிறப்புரை–யாற்றினார். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ஊராட்சிக்கு வரவேண்டிய மாநில நிதிக்குழு மானிய நிதியை மாதம் தவறாமல் விடுவிக்க வேண்டுமெனவும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளையும், தோல்வியுற்ற நபர்களையும் இணைத்து வாட்ஸ்அப் குழு ஆரம்பித்து கண்காணிக்கும் பொருட்டு ஏற்படும் இடர்பாடுகளை அறிந்து அம்முடிவை கைவிட வேண்டும் எனவும்,

    அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தினை செயல்படுத்த இ டெண்டர் முறையினை கைவிட்டு அந்தந்த ஊராட்சி மூலமே செயல்படுத்த ஆவணம் செய்ய வேண்டும் எனவும், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான பஞ்சாயத்துராஜ் அதிகாரங்களை முழுமையாக வழங்க வேண்டுமெனவும், பஞ்சாயத்தில் ஈ.பி. கணக்கில் மிகையாக தொகை உள்ள ஊராட்சிகளில் கூடுதல் தொகையை முதல் கணக்கிற்கு நிதி மாற்றம் செய்ய வேண்டுமெனவும்,

    ஒவ்வொரு ஊராட்சியிலும் கூடுதல் தூய்மை காவலர்கள், கூடுதல் ஒ.எச்.டி. இயக்குனர்களை ஊராட்சிகளின் தேவைக்கேற்ப நியமனம் செய்ய வேண்டும், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தினை அடுத்த நிதியாண்டு இறுதிக்குள் அனைத்து ஊராட்சிகளுக்கும் விரிவுபடுத்தி செயல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு துணைச் செயலாளர் நாசர், துணைத்தலைவர்கள் ராஜ்குமார், விஜய் பிரசாத், உள்பட 34 ஊராட்சி மன்ற தலைவர்களும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×