search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் மல்லிகைப்பூ விலை கடும் உயர்வு -  கிலோ ரூ. 1800-க்கு விற்பனை
    X

    சந்திப்பு பூ மார்க்கெட்டில் பிச்சிப்பூ விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருக்கும் காட்சி.

    நெல்லையில் மல்லிகைப்பூ விலை கடும் உயர்வு - கிலோ ரூ. 1800-க்கு விற்பனை

    • இந்த மாதத்தின் முதலாவது சுப முகூர்த்த தினம் நாளை வருகிறது
    • பிச்சிப்பூ ஒரு கிலோ ரூ.700 முதல் ரூ.900 வரை விற்பனை ஆகிறது.

    நெல்லை:

    இந்த ஆண்டு கார்த்திகை மாதம் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த மாதத்தின் முதலாவது சுப முகூர்த்த தினம் நாளை வருகிறது. இந்த நாளில் ஏராளமான சுப நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சந்திப்பு கெட்வெல் பூமார்க்கெட்டில் இன்று குறைந்த அளவு பூக்களே விற்பனைக்கு வந்துள்ளன. பூக்களின் தேவை அதிகரிப்பு காரணமாக நெல்லை மார்க்கெட்டில் இன்று மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.1800 வரை விற்பனை செய்யப்பட்டது.

    நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.700 முதல் ரூ.800 வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்றைய தினம் அவற்றின் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

    இதேபோல் பிச்சிப்பூ ஒரு கிலோ ரூ.700 முதல் ரூ.900 வரை விற்பனை ஆகிறது. தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் மழை பெய்து வரும் நிலையில் மல்லிகை பூக்களின் வரத்து குறைந்துள்ளது.

    இதனால் பூக்களின் விலை இன்னும் அதிகரிக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து ள்ளனர். தென்காசி மாவட்டம் சங்கரன் கோ விலில் உள்ள பூ மார்க்கெட் டில் இன்று ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.2500 வரை விற்பனை செய்யப்ப ட்டது.

    Next Story
    ×