search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாட்டில் பல மாநிலங்களில் நீர் ஆதாரங்கள் நிலைமை மிக மோசமாக உள்ளது
    X

    நாட்டில் பல மாநிலங்களில் நீர் ஆதாரங்கள் நிலைமை மிக மோசமாக உள்ளது

    • கருத்தரங்கு கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடந்தது.
    • மழை நன்றாக பெய்தால் தண்ணீர் பிரச்சினை ஏற்படாது

    கோவை,

    கோவை காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் தண்ணீர் 2022 என்ற தலைப்பில் கருத்தரங்கு கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடந்தது.

    நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தண்ணீர் மேலாண்மைதுறை சார்ந்த வல்லுநர்கள் பலர் பங்கேற்று பேசினர்.

    பின்னர் பல்கலை இணை துணை வேந்தர் ஜேம்ஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நாட்டில் பல மாநிலங்களில் நீர் ஆதாரங்களின் நிலைமை மிக மோசமாக உள்ளது. கால நிலை மாற்றமே இதற்கு முக்கிய காரணமாகும்.

    இமயமலையில் பனிசிகரங்கள் வேகமாக உருகி வருகின்றன.

    இதனால் வெள்ளம், வறட்சி போன்றவை அதிகம் காணப்படுகிறது. கடல்நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கேரளா, ஒடிசா, காஷ்மீ்ர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் அதிகம் ஏற்படுகிறது. நீர் ஆதாரங்களின் இன்றைய நிலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த கருத்தரங்கு நடத்தப்பட்டது.

    தமிழகத்தை பொருத்தவரை நீர் ஆதாராங்களின் நிலையை பருவமழை தான் நிர்ணயம் செய்கின்றன.

    மழை நன்றாக பெய்தால் தண்ணீர் பிரச்சினை ஏற்படாது. பருவ மழை சரிவர பொழியவில்லை என்றால் வறட்சி ஏற்படும்.

    இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நீர் ஆதாரங்களின் இன்றைய நிலை மற்றும் அதை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய ஆலோசனைகள் கருத்தரங்கில் வல்லுநர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×