search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையப்பர் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
    X

    உண்டியல் எண்ணும் பணி நடைபெற்ற போது எடுத்தபடம்.

    நெல்லையப்பர் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

    • நெல்லை டவுன் நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோவிலில் நிறுவப்பட்டுள்ள நிரந்தர உண்டியல்கள் அவ்வப்போது திறந்து எண்ணப்படுவது வழக்கம்.
    • கடைசியாக கடந்த மார்ச் மாதம் 30-ந்தேதி உண்டி யல்கள் திறந்து எண்ணப்பட்டன.

    நெல்லை:

    நெல்லை டவுன் நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோவிலில் நிறுவப்பட்டுள்ள நிரந்தர உண்டியல்கள் அவ்வப்போது திறந்து எண்ணப்படுவது வழக்கம். கடைசியாக கடந்த மார்ச் மாதம் 30-ந்தேதி உண்டி யல்கள் திறந்து எண்ணப்பட்டன.

    21 உண்டியல்கள்

    இந்நிலையில் நெல்லை யப்பர் கோவிலின் நிரந்தர உண்டியல்கள் இன்று திறந்து எண்ணப்பட்டன. அதன்படி 21 நிரந்தர உண்டியல்கள் ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து திறந்து எண்ணப்பட்டது.

    இதில் கண்காணிப்பு அதிகாரியாக நாகர்கோவில் இந்து சமய அறநிலை யத்துறை உதவி ஆணையர் தங்கம், நெல்லை மேற்கு பிரிவு இந்து சமய அறநிலையத்துறை ஆய்வர் தனலெட்சுமி என்ற வள்ளி ஆகியோர் பங்கேற்றனர்.

    ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து ள்ளனர். இதில் தன்னார்வ லர்கள், பக்தர்கள் கலந்து கொண்டு உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×