என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடி மாநகர மேற்கு பகுதியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி அமைக்கும் பணி
- அ.தி.மு.க. பூத் கமிட்டி அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆலோசனை வழங்கும் கூட்டம் தூத்துக்குடி 18-வது வார்டு ராஜகோபால்நகரில் நடைபெற்றது.
- முன்னாள் அமைச்சர் சண்முகநாதன், பூத் கமிட்டி நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும் பார்வையிட்டு பணிகளை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகர மேற்கு பகுதியில் தூத்துக் குடி மற்றும் ஓட்டப்பி டாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் அ.தி.மு.க. இளைஞர்- இளம்பெண்கள் பாசறை, மகளிர் அணி மற்றும் அ.தி.மு.க. பூத் கமிட்டி அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆலோசனை வழங்கும் கூட்டம் தூத்துக்குடி 18-வது வார்டு ராஜகோபால்நகரில் நடைபெற்றது.
மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலளரும், வட்டச்செயலாளருமான முருகன், மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ் ஏற்பாட்டில் நடந்த கூட்டத்திற்கு வட்டச் செயலாளர் ஏ.முருகன் தலைமை தாங்கினார்.
தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்ச ருமான சண்முகநாதன், மேற்கு பகுதிக்கு உட்பட்ட வார்டுகளில் அ.தி.மு.க. சார்பில் அமைக்கப் பட்டுள்ள பூத் கமிட்டி நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும் பார்வையிட்டு பணிகளை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் என். சின்னத்துரை, முன்னாள் நகர்மன்ற தலைவர் ஹென்றி, தமிழ்நாடு- புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் வக்கீல் பிரபு, மாவட்ட துணை செயலாளர் சந்தனம், மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ், மாவட்ட இளைஞர்- இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஜெ. தனராஜ், கிழக்கு பகுதி செயலாளர் சேவியர், முன்னாள் தொகுதி இணை செயலாளர் பெருமாள், பகுதி துணை செயலாளர்கள் செண்பக செல்வன், கணேசன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் முருகன், திருச்சிற்றம்பலம், வக்கீல்கள் சரவணபெருமாள், முனியசாமி, ரமேஷ், வட்டச் செயலாளர்கள் மனுவேல் ராஜ், வெங்கடேஷ், கொம்பையா, தூத்துக்குடி மணிகண்டன், முருகன், சுப்பிரமணி பாண்டி, மணி கணேஷ், மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைத் தலைவர் கே.டி.சி. ஆறுமுகம், மண்டல அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க இணைச் செயலாளர் கே.டி.சி. லெட்சுமணன், முன்னாள் கவுன்சிலர் பொன்ராஜ், வட்டச் செயலாளர்கள் மணோகர், ஜெயக்குமார், சேவியர்ராஜ், பூக்கடை வேலு, ஆறுமுகநயினார், ஜெபமணி, பாலகிருஷ்ணன், பாலஜெயம், சாம்ராஜ், ஐ.டி. விங் சகாயராஜா, யுவன் பாலா, ஆனந்த், சிதம்பரராஜா, மைதீன், முகமத் காலிப், உதயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்