என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாட்டை முன்னேற்ற இளைஞர்கள் பொறு–ப்பேற்க வேண்டும்- ஆளுநர் பேச்சு
- 12 முனைவர் பட்டங்கள் உள்ளிட்ட 339 மாணவ- மாணவிகளுக்கு தமிழக ஆளுநர் பட்டங்களை வழங்கினார்.
- உட்கட்டமைப்பு உள்ளிட்ட–வைகளில் தமிழ்நாடு இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று தெரிவித்தார்.
நாகப்பட்டினம்:
நாகை அடுத்த நாகூரில் உள்ள தமிழ்நாடு ஜெயலலிதா மீன்வளபல்கலை க்கழகத்தி ன் 7வது பட்டம ளிப்பு விழா நடைபெற்றது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றனர்.
215 இளங்கலை மீன்வள அறிவியல் மாணவர்கள், 55 இளநிலை தொழில்நுட்ப கல்வி மாணவர்கள், 25 முதுகலை மீன்வள அறிவியல் மாணவர்கள், 12 முனைவர் பட்டங்கள் உள்ளிட்ட 339 மாணவ- மாணவிகளுக்கு தமிழக ஆளுநர் பட்டங்களை வழங்கினார்.
பின்னர் ஆளுநர் வாசிக்க பட்டம் பெற்ற மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொ ண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறுகையில்;
உலக பொருளாதாரம் வேகமாக முன்னேறி கொண்டு இருக்கும் சூழலில், அதே வேகத்தில் நாமும் முன்னேற வேண்டும். சுதந்திர இந்தியாவில் 75 ஆண்டுகளில் பல சாதனைகளை செய்துள்ளோம்.
அடுத்த வர 25 ஆண்டுகளில் இதைவிட வேகமாக உழைக்கவேண்டும்.
நாட்டின் முன்னேற்றத்திற்கு இளை–ஞர்கள் பொறுப்பேற்க வேண்டும். மாறுபட்ட புதிய சிந்தனைகளை உருவாக்கி நாட்டை முன்னேற்ற இளைஞர்கள் பொறுப்பேற்க வேண்டும்.
மகளிர் மேம்பாடு, தொழிற்துறை, உட்கட்டமைப்பு உள்ளிட்டவைகளில் தமிழ்நாடு இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று தெரிவித்தார்.
விழாவில் நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர், பல்கலைகழக துணை வேந்தர்கள், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், தமிழ்நாடு தாட்கோ தலைவர் மதிவாணன், எம்.எல்.ஏ.க்கள் நாகை மாலி, நிவேதாமுருகன், மீன்வளத்துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பட்டமளிப்பு விழாவிற்கு கவர்னர் வருகை தந்ததை அடுத்து நாகை மாவட்டத்தில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.