search icon
என் மலர்tooltip icon

    தேனி

    • கருப்பசாமி கோவில் பீடம் ஆக்கிர மிப்பில் இருந்தது தெரிய வந்தது.
    • அந்த கோவில் பீடத்தை போலீசார் பாது காப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் நெடுஞ்சா லைத்துறையினர் அகற்றினர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் - போடி இடையே மாநில நெடுஞ்சாலை கோம்பை வழியாக செல்கிறது. இங்கு சாலையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பல ஆண்டுகளுக்கு முன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி உத்தமபாளையம் நெடுஞ்சாலைத்துறைக்கு ஆக்கிரமிப்பின் உண்மை த்தன்மையை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி நெடுஞ்சாலைத்துறையினர் உரிய அறிவிப்பு ஆணை வழங்கினார்.

    இதனையடுத்து அப்பகுதி யில் உள்ள கருப்பசாமி கோவில் பீடம் ஆக்கிர மிப்பில் இருந்தது தெரிய வந்தது. அந்த கோவில் பீடத்தை போலீசார் பாது காப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் நெடுஞ்சா லைத்துறையினர் அகற்றி னர். மேலும் கோம்பை போலீஸ் நிலையம் அருகே உள்ள பாலம் முதல் கால்ந டை ஆஸ்பத்திரி வரை நெடுஞ்சாலையோரத்தில் இருந்து 2 வீடுகள் உள்பட நூற்றுக்கணக்கான ஆக்கிரமிப்புகளையும் அகற்றினர்.

    ஆண்டு தோறும் நெடுஞ்சாலைத்துறையினர் சாலையோர ஆக்கிரமிப்பு களை தொடர்ந்து அகற்றி வருகின்றனர். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே அதே இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் செய்யப்படு கிறது. எனவே அதிகாரிகள் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கழுத்து, மூக்கு, தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் ரத்த காயங்கள் மற்றும் நகக்கீறல்கள் இருந்தது.
    • ரமேசின் தாய் அழகம்மாள் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணவேணியை போலீசார் கைது செய்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி ஜீவாநகரை சேர்ந்த கருப்புச்சாமி மகன் ரமேஷ் (வயது 47). இவருக்கும் கிருஷ்ணவேணி (35) என்பவருக்கும் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1 மகனும், 1 மகளும் உள்ளனர். ரமேசுக்கு சொந்தமாக கேரள மாநிலம் உடும்பன் சோலையில் ஏலக்காய் தோட்டம் உள்ளது.

    அவ்வப்போது அங்கு சென்று விவசாய பணிகளை கவனித்துவிட்டு வருவது வழக்கம். இதனிடையே கணவன், மனைவியிடையே குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    நேற்று ரமேஷ் தனது வீட்டில் தற்கொலைக்கு முயன்றதாகவும், தான் அவரை காப்பாற்றியதாகவும் கூறி உயிருக்கு ஆபத்தான நிலையில் கிருஷ்ணவேணி தனது கணவரை போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது கழுத்து, மூக்கு, தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் ரத்த காயங்கள் மற்றும் நகக்கீறல்கள் இருந்தது.

    மேலும் அவரது மர்ம உறுப்பிலும் பலத்த காயம் இருந்தது. இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதன்பேரில் கிருஷ்ணவேணியை இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    எனது கணவர் தினமும் செக்ஸ்தொல்லை கொடுத்து வந்தார். ஏற்கனவே 2 குழந்தைகள் இருப்பதால் நான் அதற்கு மறுத்து வந்தேன். இருந்தபோதும் அவரது தொல்லை நிற்கவில்லை. சம்பவத்தன்றும் என்னிடம் உறவுகொள்ள முயன்றபோது அவரை தாக்கி கீழே தள்ளினேன். மேலும் அவரை அடித்து தள்ளியதில் உடலில் காயங்கள் ஏற்பட்டது. அதன் பிறகும் ஆத்திரம் அடங்காமல் மர்ம உறுப்பில் மிதித்தும், கடித்தும் கொலை செய்தேன்.

    அக்கம் பக்கத்தினரை நம்ப வைக்க அவர் தூக்கு போட்டதுபோல செட்டப் செய்தேன். இருந்த போதும் உடலில் காயங்கள் இருந்ததால் என்னால் தப்பிக்க முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து ரமேசின் தாய் அழகம்மாள் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணவேணியை போலீசார் கைது செய்தனர். 

    • குடோன் மற்றும் தேங்காய் உரிமட்டை வைத்திருக்கும் பகுதியில் தீ பற்றியதாக அவரது நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் தகவல் தெரிவித்தனர்.
    • உத்தமபாளையம் மற்றும் கம்பம் தீயணைப்புத்துறையினர் இணைந்து போராடி தீயை அணைத்தனர்.

    உத்தமபாளையம்:

    உத்தமபாளையம் மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இளையநம்பி. இவர் அனுமந்தன்பட்டி தீட்டிபாைற சாலையில் உள்ள வள்ளியம்மன் குளம் அருகே கயிறு மில் வைத்து நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று வியாபாரம் முடிந்ததும் மில்லை பூட்டி சென்றனர். இந்த நிலையில் குடோன் மற்றும் தேங்காய் உரிமட்டை வைத்திருக்கும் பகுதியில் தீ பற்றியதாக அவரது நிறுவனத்தில் பணிபுரியும் டிரைவர் தீபக் மற்றும் பாண்டி ஆகியோர் தகவல் தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உத்தமபாளையம் மற்றும் கம்பம் தீயணைப்புத்து றையினர் இணைந்து போராடி தீயை அணைத்தனர்.

    இருந்தபோதும் சுமார் ரூ. 7½ லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்ததாக உத்தமபாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த சில வாரங்களாக வருசநாடு பகுதியில் பெய்து வரும் தொடர் கன மழையின் காரணமாக வருசநாடு-வாலிப்பாறை சாலை அதிக அளவில் சேதமடைந்து காணப்படுகிறது.
    • குறிப்பாக வருசநாடு-முருக்கோடை- உருட்டிமேடு இடையிலான தார் சாலை அதிக அளவில் சேதமடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்றதாக மாறிவிட்டது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு முதல் வாலிப்பாறை வரையிலான தார் சாலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

    அதன் காரணமாக தார் சாலை அதிக அளவில் சேதமடைந்து காணப்படுகிறது. கடந்த சில வாரங்களாக வருசநாடு பகுதியில் பெய்து வரும் தொடர் கன மழையின் காரணமாக வருசநாடு-வாலிப்பாறை சாலை அதிக அளவில் சேதமடைந்து காணப்படுகிறது.

    குறிப்பாக வருசநாடு-முருக்கோடை- உருட்டிமேடு இடையிலான தார் சாலை அதிக அளவில் சேதமடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்றதாக மாறிவிட்டது.

    இதனால் பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகன விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பெரிய அளவிலான விபத்துக்கள் நடைபெறும் முன்பு வருசநாடு-வாலிப்பாறை இடையே தார் சாலை அமைக்க மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தொடர் மழை காரணமாக வைகை அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது.
    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 131.30 அடியாக உள்ளது. 1053 கன அடிநீர் வருகிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் மதுரை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது.

    தொடர் மழை காரணமாக வைகை அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. 71 அடி உயரம் கொண்ட அணையில் 70 அடியில் நீர் மட்டம் நிலைநிறுத்தப்பட்டு அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 10ந் தேதி அணையின் நீர்மட்டம் 70.51 அடியாக இருந்தபோது பெரியாறு பிரதான கால்வாயின் கீழ் உள்ள முதல்போக பாசனத்திற்கு 900 கன அடி திறக்கப்பட்டது. இதன் மூலம் மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தில் 5041 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். பேரணை மேலூர் பகுதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் கூடுதலாக திருமங்கலம் பிரதான கால்வாயில் ஒருபோக பாசன நிலங்களுக்கு இன்று முதல் 10 நாட்களுக்கு தண்ணீர் இருப்பை பொறுத்து வினாடிக்கு 230 கன அடி நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

    அதன்படி இன்று முதல் பெரியாறு பாசன கால்வாயில் 900 கன அடி. திருமங்கலம் கால்வாயில் 230 கன அடி, மதுரை மாவட்ட குடிநீர் உள்பட 1899 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணைக்கு 597 கன அடி நீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 70.28 அடியாக உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 131.30 அடியாக உள்ளது. 1053 கன அடிநீர் வருகிறது. அணையில் இருந்து 105 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.90 அடியாக உள்ளது. வரத்து 147 கன அடி. திறப்பு 100 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.41 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 78.47 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    பெரியாறு 4.2, தேக்கடி 1.8, உத்தமபாளையம் 1.2, போடி 0.2, வைகை 3.6, மஞ்சளாறு 2, பெரியகுளம் 5, வீரபாண்டி 3.2, அரண்மனைபுதூர் 2, ஆண்டிபட்டி 1.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • வருகின்ற 17ந் தேதி காலை 11 மணியளவில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற உள்ளது.
    • குறைகளை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 17ந் தேதி காலை 11 மணியளவில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற உள்ளது. எனவே தேனி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைகள் சம்பந்தமான திட்டங்கள் மற்றும் குறைகளை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம்.

    மேலும் தங்களது கோரிக்கைகளை மாவட்ட கலெக்டரிடம் மனுக்களாக வழங்கலாம். விவசாயிகளிடமிருந்து பெறப்படும் மனுக்கள், தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி, அதன்மீது தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, அடுத்து நடைபெறும் கூட்டத்தில் விவசாயிகளிடம் நேரிடையாக தெரிவிக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

    • மயானத்தில் இருந்த மரங்களை வெட்டிவிட்டு, அந்த இடத்தை ஆக்கிரமித்து தென்னந்தோப்பாக மாற்றியுள்ளனர்.
    • இதன் காரணமாக மயானத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க ரூ.3 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அப்பணி பாதியிலேயே கைவிடப்பட்டது.

    சின்னமனூர்:

    சின்னமனூா் அருகே முத்துலாபுரம் ஊராட்சி பரமத்தேவன்பட்டி மயானத்தில் 150 ஆண்டுகள் பழமையான ஆலமரம் உள்ளது. மயானத்தை ஆக்கிரமிக்கும் நோக்கத்தில் ஆலமரத்தை மர்ம நபர்கள் தீ வைத்து அழித்து வருகிறார்கள்.

    மயானத்தில் இருந்த மரங்களை வெட்டிவிட்டு, அந்த இடத்தை ஆக்கிரமித்து தென்னந்தோப்பாக மாற்றியுள்ளனர். இதன் காரணமாக மயானத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க ரூ.3 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அப்பணி பாதியிலேயே கைவிடப்பட்டது. தற்போது இறந்தவர்களை அடக்கம் செய்ய முடியாத நிலை உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், பரமத்தேவன்பட்டி கருப்பசாமி கோவில் சாலையிலுள்ள மயான ஆக்கிரமிப்புகளை மீட்க வேண்டும் . அதேபோல மயானத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை முழுமையாக பயன்படுத்தி சுற்றுச் சுவர் அமைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறைக்கு பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

    மரத்தை தீ வைத்து அழித்து வரும் மர்ம நபர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்றனர்.

    • காளைகளின் வயது, தூரம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
    • ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

    கூடலூர்:

    கூடலூர் மேற்கு முத்தாலம்மன் கோவில் திருவிழாவையொட்டி இரட்டை மாட்டு வண்டி பந்தயம் சுருளிப்பட்டியில் இன்று நடந்தது . இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சிக்கு கூடலூர் ஒக்கலிகர் (காப்பு ) மகாஜன சங்க பொருளாளர் சரவணன் தலைமை தாங்கினார் . தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மகாராஜன் எம்.எல்.ஏ.. கூடலூர் தி.மு.க. நகரச் செயலாளர் லோகன்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

    முன்னதாக போட்டியில் பங்கேற்க இருந்த காளைகளுக்கு கால்நடை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அதன் பிறகு சுருளிப்பட்டியில் இருந்து போட்டி தொடங்கியது. தட்டான் சிட்டு, பூஞ்சிட்டு, கரிச்சான் ஜோடி, நடு ஜோடி, பெரிய மாடு என 6 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடந்தது . இதில் திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி காளைகளுடன் போட்டியில் பங்கேற்றனர்.

    காளைகளின் வயது, தூரம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு போட்டிகள் நடத்தப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அதன்படி மொத்தம் 18 பேர் பரிசுகளை பெற்றனர். குறிப்பாக பெரிய ஜோடி பிரிவுக்கு அதிகபட்ச தூரமாக சுருளிப்பட்டியில் இருந்து சுருளியாறுமின் நிலையம் விலக்கு வரை என நிர்ணயிக்கப்பட்டது.

    இதில் முதல் இடம் பிடித்த மாட்டிற்கு ரூ.40 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.30 ஆயிரம் , 3-ம் பரிசு ரூ. 20 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுருளிப்பட்டியில் இருந்து சுருளி அருவி மற்றும் சுருளியாறு மின் நிலைய சாலையோரங்களில் நின்று இருந்த பொதுமக்கள் மாட்டு வண்டிகளில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.

    போட்டிக்கான ஏற்பாடுகளை கூடலூர் ஒக்கலிகர் (காப்பு ) ஏர் உழவர் சங்கத்தினர் செய்திருந்தனர். கூடலூரில் இருந்து லோயர்கேம்ப் வழிவிடும் முருகன் கோவில் வரை நடக்க இருந்த இரட்டை மாட்டுவண்டி பந்தயத்திற்கு போலீசார் அனுமதி வழங்காததால் இந்தப் போட்டி சுருளிப்பட்டி பகுதிக்கு மாற்றம் செய்யபபட்டது குறிப்பிடத்தக்கது.

    • 10ம் வகுப்பு வரை படித்து விட்டு தனியார் மஹாலில் கடந்த 4 ஆண்டுகளாக துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்தார்.
    • சம்பவத்தன்று வேலைக்கு சென்ற முத்துப்பாண்டி இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.

    தேனி:

    பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த நாகராஜ் மகன் முத்துப்பாண்டி (வயது 28). இவர் 10ம் வகுப்பு வரை படித்து விட்டு தனியார் மஹாலில் கடந்த 4 ஆண்டுகளாக துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்தார்.

    சம்பவத்தன்று வேலைக்கு சென்ற முத்துப்பாண்டி இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவரது உடல் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    தனது மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக நாகராஜ் அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 8 மாத கர்ப்பிணியாக இருந்தவர் தீபாவளி அன்று தனது அம்மா வீட்டில் கொண்டாடி விட்டு இரவு தூங்கச் சென்றார்.
    • மறுநாள் காலையில் அவர் எழுந்திரிக்க வில்லை.

    தேனி:

    போடி டொம்புசேரி பட்டாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வீரக்குமார் மனைவி சரண்யா (வயது 23). இவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். தீபாவளி அன்று தனது அம்மா வீட்டில் கொண்டாடி விட்டு இரவு தூங்கச் சென்றார்.

    மறுநாள் காலையில் அவர் எழுந்திரிக்க வில்லை. உடனடியாக டொம்புசேரி ஆரம்பசுகாதார நிலைய டாக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டாக்டர் மோகன்ராஜ் சம்பவ இடத்துக்கு வந்து சரண்யாவை பரிசோதனை செய்து பார்த்ததில் அவர் இறந்து விட்டதாக தெரி வித்தார்.

    இது குறித்து பழனிசெட்டி பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளி க்கப்பட்டது. போலீசார் சரண்யா இறப்புக்கான காரணம் குறித்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • வன விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்திவிடாமல் காக்க விவசாயிகள் சிறு குடில் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கடந்த 2015 ஆம் ஆண்டு இப்பகுதியில் சிறுத்தை நடமாடியது உறுதி செய்யப்பட்டது.

    கம்பம்:

    கம்பத்திலிருந்து கம்பம்மெட்டு செல்லும் சாலையில், மலையடிவாரப் பகுதியில் மானாவாரி விவசாய பயிர்களான நிலக்கடலை, மொச்சை, எள் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் வன விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்திவிடாமல் காக்க விவசாயிகள் சிறு குடில் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்தப் பகுதியில் காவலுக்காக வைக்கப்பட்ட நாய்கள் காணாமல் போனது. தொடர்ந்து இன்று காலை கம்பம்மெட்டு மலைப்பாதை அடிவாரப் பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் கடமான் ஒன்றை சிறுத்தை வேட்டையாடி இறைச்சியை கடித்து குதறி தின்று விட்டு தப்பி ஓடியதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கம்பம் மேற்கு வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது செந்நாய் அதிகமாக இப்பகுதியில் காணப்படுவதாகவும், மானை செந்நாய் வேட்டையாடிருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.

    அதே சமயம் மழை பெய்து வருவதால் செடி கொடிகள் அதிகமாக இருந்ததாலும் வனவிலங்குகளின் கால் தடங்களை உறுதி செய்ய முடியவில்லை. கடந்த 2015 ஆம் ஆண்டு இப்பகுதியில் சிறுத்தை நடமாடியது உறுதி செய்யப்பட்டது. அப்போது நாய்கள், வனவிலங்குகளை சிறுத்தை வேட்டையாடியதும் குறிப்பிடத்தக்கது. இதனிடையே விவசாயிகள் மத்தியில் சிறுத்தை நடமாட்டம் குறித்த வதந்தி பரவியதால் தொழிலாளர்கள் விவசாய பணிகளுக்கு செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். மான் எவ்வாறு இறந்தது? சிறுத்தை வேட்டையாடியதால் இறந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கன மழை பெய்து வருவதால் முல்லை ப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது.
    • 152 அடி உயரமுள்ள அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 130.95 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கன மழை பெய்து வருகிறது. இதனால் முல்லை ப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. 152 அடி உயரமுள்ள அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 130.95 அடியாக உள்ளது. வரத்து 782 கன அடி. திறப்பு 105 கன அடி. இருப்பு 4919 மி.கன அடி.

    இதே போல் வைகை அணையின் நீர் மட்டமும் முழு கொள்ளளவை எட்டியதால் கடந்த 10-ந் தேதி முதல் திண்டுக்கல், மதுரை மாவட்ட முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையின் நீர் மட்டம் 70.41 அடியாக உள்ளது. வரத்து 748 கன அடி. திறப்பு 969 கன அடி. இருப்பு 5934 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 54.70 அடி. வரத்து 170 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 429 மி.கன அடி.

    சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டி 126.47 அடியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அணைக்கு வரும் 115 கன அடி முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100 மி.கன அடியாக உள்ளது.

    தொடர்ந்து தேனி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலை களில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்க ப்பட்டுள்ளது.

    ×