search icon
என் மலர்tooltip icon

    தென்காசி

    • ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து கணிசமாக குறைய தொடங்கி உள்ளது.
    • சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைய தொடங்கி உள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளமான குற்றால அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தண்ணீர் வரத்து அதிகரித்து குற்றால சீசன் களைகட்டும்.

    ஆனால் தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் போதுமான அளவு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை இல்லாததால் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்தும் குறைய தொடங்கி உள்ளது.

    கடந்த 3 நாட்களாக தென்காசி மாவட்டத்தில் வெயிலின் தாக்கமானது படிப்படியாக அதிகரிக்க தொடங்கி உள்ளதால் குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து கணிசமாக குறைய தொடங்கி உள்ளது.

    மேலும் சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைய தொடங்கி உள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் பட்சத்தில் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க கூடும்.

    • தென்காசி பகுதியில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    • போஸ்டர்களில், கழகத்தை காக்க வாருங்கள் புரட்சி தாய் சின்னம்மா அவர்களே.

    தென்காசி:

    தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகளில் அ.தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாததால் அக்கட்சியை வழிநடத்த சசிகலா வரவேண்டும் என கோரி பாவூர்சத்திரம், தென்காசி பகுதியில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    அந்த போஸ்டர்களில், கழகத்தை காக்க வாருங்கள் புரட்சி தாய் சின்னம்மா அவர்களே. போதும், போதும் இந்த பொறுமை போதும்.

    கழக உறுப்பினர்களையும் கழகத்தை நிலைநாட்டி கழகத்தை தொடர் தோல்வியில் இருந்து உயிர்பிக்கவும் தங்களது பாணியில் மீண்டும் கழகத்தை வழிநடத்தவும் தலைமை ஏற்கவும் வாருங்கள் வாருங்கள்.

    தாயே புரட்சித்தாய் சின்னம்மா அவர்களே சிங்க பெண்ணாய் வாருங்கள் என்ற வாசகத்துடன் கழக வழக்கறிஞர் அணியினர் சார்பில் போஸ்டர்கள் அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ளன.

    • தென்காசி பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 15 லட்சத்து 29 ஆயிரத்து 130 வாக்குகள் உள்ளன.
    • டாக்டர் கிருஷ்ணசாமி தொடக்கத்தில் இருந்து அனைத்து சுற்றுகளிலும் 2-வது இடத்தையே பிடித்து வந்தார்.

    தென்காசி (தனி) பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிட்டார்.

    அவர் இதேபோல் ஒவ்வொரு தேர்தலின் போதும் வெவ்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தென்காசி தொகுதியில் போட்டியிட்டு வருகிறார்.

    இந்த முறையுடன் சேர்த்து டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியில் தொடர்ந்து 7 முறை போட்டியிட்டார். கடந்த 1998, 1999, 2004, 2009, 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் நடந்த பாராளுமன்ற தேர்தல்களில் தென்காசி தொகுதியை குறிவைத்து போட்டியிட்ட கிருஷ்ணசாமி அவை அனைத்திலும் தோல்வியையே சந்தித்தார்.

    எனவே இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று முழுவீச்சில் களப்பணியாற்றிய டாக்டர் கிருஷ்ணசாமி எதிர்பார்த்த அளவிற்கு ஜொலிக்க வில்லை.

    தென்காசி பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 15 லட்சத்து 29 ஆயிரத்து 130 வாக்குகள் உள்ள நிலையில், இந்த தேர்தலில் 10 லட்சத்து 32 ஆயிரத்து 976 வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன. அதாவது 67.72 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது.

    நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே தி.மு.க. வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் முன்னிலை வகிக்க தொடங்கினார். அவர் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த கடைசி சுற்று வரையிலும் முதல் இடத்திலேயே நீடித்தார்.

    டாக்டர் கிருஷ்ணசாமி தொடக்கத்தில் இருந்து அனைத்து சுற்றுகளிலும் 2-வது இடத்தையே பிடித்து வந்தார்.

    முடிவில் ராணி ஸ்ரீகுமார் 4 லட்சத்து 25 ஆயிரத்து 679 வாக்குகள் பெற்றார். ஆனால் டாக்டர் கிருஷ்ணசாமி 2 லட்சத்து 29 ஆயிரத்து 480 வாக்குகள் மட்டுமே பெற்றார். அவர் கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலின் போது 3 லட்சத்து 55 ஆயிரத்து 870 ஓட்டுகள் பெற்ற நிலையில் இந்த முறை சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் ஓட்டுகள் குறைவாகவே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சாரல் மழையும் பெய்து ‘குளு குளு’ சீசன் நிலவுகிறது.
    • தண்ணீர் வரத்து சீரானதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தொடங்கினர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முக்கிய சுற்றுலா தளமாக விளங்கிவரும் குற்றால அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதத்தில் சீசன் களை கட்டும் .

    அப்போது அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இதில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுவர். தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் குற்றால அருவிகளுக்கு குளிக்க வருவர்.

    இந்த ஆண்டிற்கான தென்மேற்கு பருவமழையானது கேரளாவில் தொடங்கி உள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசி வருவதோடு அவ்வப்போது சாரல் மழையும் பெய்து 'குளு குளு' சீசன் நிலவுகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று மாலையில் பெய்த மழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி மற்றும் மெயின் அருவிக்கு தண்ணீர் வரத்து திடீரென அதிகரித்தது .

    இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி எச்சரிக்கை ஒலி கருவியை பயன்படுத்தி அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளை போலீசார் பாதுகாப்புடன் அப்புறப்படுத்தினர்.

    இருப்பினும் சிறிது நேரத்தில் மீண்டும் தண்ணீர் வரத்து சீரானதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளிக்க தொடங்கினர்.

    இன்று காலையில் ஐந்தருவி மற்றும் மெயின் அருவி பகுதியில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் ஆர்வமுடன் குளித்தனர்.அருவிகளில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் அவர்கள் வரிசையில் நிற்க வைக்கப்பட்டு பகுதி, பகுதியாக குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். அருவிக்கரையில் போதிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மெயின் அருவி கரையில் ஆண்கள் குளிக்க செல்லும் பகுதியில் தரைத்தளம் சீரமைக்கப்படும் பணிகள் காரணமாக அந்த வழியே யாரும் அனுமதிக்கப்பட வில்லை. அந்த பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று காலை முதல் அந்த வழியே மக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித் துள்ளது.

    குற்றால அருவிகளில் நீர்வரத்து சீராக இருப்ப தாலும், சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுவதாலும் குற்றாலத்தில் உள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • போலீஸ் ஏட்டுக்கள் தங்கதுரை, ஜான்சன் ஆகிய 2 பேரும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள சிவலார்குளம் விலக்கு பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சிவலார்குளம் கிராமத்தை சேர்ந்த முத்தையா மகன்கள் மகேஷ்(வயது 26), பெர்லின்(24), கஜேந்திரா(22) மற்றும் மரியசுந்தரம் மகன் நவீன்(27) ஆகியோரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அவர்களிடம் கஞ்சா சிக்கியது.

    தொடர்ந்து அவர்களது வீட்டில் சோதனை செய்தபோது 3 கிலோ கஞ்சா மற்றும் ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று வாலிபர்கள் 4 பேரையும் இன்ஸ்பெக்டர் மாதவன் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்.

    இந்நிலையில் கைதான மகேஷ், பெர்லின், கஜேந்திரா ஆகியோரின் சகோதரரான கல்யாணசுந்தரம் நேற்று மதியம் ஆலங்குளம் போலீஸ் நிலையத்திற்கு சென்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பறிமுதல் செய்த ரூ.2 லட்சத்தை திருப்பி தருமாறு கூறி தகராறு செய்ததாகவும், தொடர்ந்து போலீசாரை வெட்டிவிடுவதாக கொலை மிரட்டல் விடுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

    இதற்கிடையே நேற்று இரவு மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்ட ஆலங்குளம் பஸ் நிலையம் அருகே மெயின்ரோட்டில் போலீஸ் ஏட்டுக்கள் தங்கதுரை, ஜான்சன் ஆகிய 2 பேரும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்கு கல்யாணசுந்தரம் மற்றும் அவரது நண்பர் நிர்மல் குமார் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வந்தனர். பின்னர் ஏட்டுக்களிடம் தகராறு செய்த அவர்கள், சட்டைக்குள் பின்புறத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் திடீரென ஏட்டு 2 பேரையும் வெட்ட முயன்றனர்.

    உடனே ஏட்டுக்கள் சுதாரித்துக்கொண்டு விலகிய நிலையில், அங்கிருந்த போலீசாரின் மோட்டார் சைக்கிள் மற்றும் அவர்களது வாக்கி டாக்கி சேதம் அடைந்தது. ஏட்டுக்கள் 2 பேரும் உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து எதிரெதிர் திசைகளில் ஓடினர். ஏட்டு தங்கதுரை எதிரே உள்ள ஓட்டலை நோக்கி ஓடினார். அப்போது அவருக்கு தலையில் லேசான வெட்டு விழுந்தது. பின்னர் வாலிபர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து அறிந்த ஆலங்குளம் போலீசார் பஸ் நிலைய பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய கல்யாண சுந்தரம் மற்றும் நிர்மல் குமாரை தேடி வருகின்றனர்.

    • குற்றாலம் பூங்கா பகுதியில் நின்றிருந்த பழமையான மரம் பலத்த காற்றின் காரணமாக முறிந்து விழுந்தது.
    • குளிர்ந்த காற்று வீசி வருவதால் சுற்றுலா பயணிகள் சீசனை அனுபவித்து வருகின்றனர்.

    தென்காசி:

    தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் தற்பொழுது தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

    இதனால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருவதோடு, காற்றின் வேகமும் அதிகரித்து காணப்படுகிறது.வேகமாக வீசி வரும் சூறைக்காற்றால் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தும், மரங்கள் முறிந்தும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

    குற்றாலம் பூங்கா பகுதியில் நின்றிருந்த பழமையான மரம் பலத்த காற்றின் காரணமாக முறிந்து விழுந்தது. அதனை உடனடியாக பணியாளர்கள் அப்புறப்படுத்திய நிலையில் குடியிருப்பு பகுதிகளிலும் மரங்கள் அதிகம் முறிந்து விழுந்துள்ளன.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மிகப்பெரிய அளவில் மழைப்பொழிவு இல்லாததால் இன்று காலையில் முக்கிய சுற்றுலா தலமான குற்றாலம் அருவிகளில் தண்ணீர் குறைந்த அளவே விழுகிறது. இருப்பினும் குளிர்ந்த காற்று வீசி வருவதால் சுற்றுலா பயணிகள் சீசனை அனுபவித்து வருகின்றனர்.

    பழைய குற்றால அருவி பகுதியில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட வேண்டும், கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது சுற்றுலா பயணிகளை எச்சரிக்கும் வண்ணம் எச்சரிக்கை கருவிகளை நிறுவ வேண்டும் என மாலை மலரில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.

    அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் அதற்கான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது.

    பழைய குற்றால அருவிப்பகுதியில் இருந்த தடுப்பு கம்பிகளை ஒட்டி வலை போன்ற இரும்பு கம்பிகள் நிறுவப்பட்டு உள்ளது. 

    • பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் சிறுவன் உயிரிழந்த நிலையில் பல்வேறு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டது.
    • இன்று காலையில் குற்றாலம் ஐந்தருவியல் மிதமாக விழுந்த தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக முக்கிய சுற்றுலாதளமான குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் சிறுவன் உயிரிழந்த நிலையில் பல்வேறு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டது.

    இந்நிலையில் வெள்ளம் குறைந்ததால் சுற்றுலா பயணிகள் அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் போதிய மழை இல்லாததால் குற்றாலத்தில் பிரதான அருவிகளான மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளுக்கு தண்ணீர் வரத்து சற்று குறைய தொடங்கியுள்ளது.

    இன்று காலையில் குற்றாலம் ஐந்தருவியல் மிதமாக விழுந்த தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

    • மலைப்பகுதியில் மழை குறைந்ததால் ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீரின் வரத்து குறைந்தது.
    • மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் அந்த அருவிகளில் குளிப்பதற்கு தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று மாலை வரை தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் அங்கு குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.

    இந்நிலையில் இன்று காலையில் மலைப்பகுதியில் மழை குறைந்ததால் ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீரின் வரத்து குறைந்தது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். அதேநேரம் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் அந்த அருவிகளில் குளிப்பதற்கு தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

    2 அருவிகளிலும் இன்று பிற்பகலில் தண்ணீர் வரத்து குறையும்பட்சத்தில் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவர் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
    • பாதுகாப்பு அம்சமாக கம்பிகள் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

    தென்காசி:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கணிசமாக விழுந்தது.

    இந்நிலையில் கடந்த 17-ந்தேதி பழைய குற்றாலம் அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் நெல்லையை சேர்ந்த அஸ்வின் என்ற சிறுவன் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு இறந்தான்.

    இதையடுத்து குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. தொடர்ந்து சில நாட்களாக அருவிகளில் மிதமான அளவிலேயே தண்ணீர் கொட்டினாலும், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

    அருவிகளில் இதுபோன்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை முன்கூட்டியே அறிந்து சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்ற தேவையான ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக நேற்று மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர், போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஆகியோர் அருவிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து அருவிகளில் குளிப்பதற்கான தடை உத்தரவு நேற்று விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் இன்று காலை முதல் மெயின் அருவி தவிர மற்ற அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    மெயின் அருவியில் தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் இன்று மாலை முதல் குளிக்க அனுமதி வழங்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பழைய குற்றாலம் அருவியில் ஒரு வாரத்துக்கு பின்னர் இன்று காலை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அங்கு பாதுகாப்பு அம்சமாக கம்பிகள் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பழைய குற்றாலம் அருவியில் இனி காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை மட்டுமே குளிக்க அனுமதி எனவும், இரவில் குளிக்க அனுமதி இல்லை எனவும் கலெக்டர் கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார்.

    • மதுபான பாட்டிலில் ஈ, எறும்பு செத்து கிடப்பதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது என விற்பனையாளர் கூறியுள்ளார்.
    • டாஸ்மாக் கடை ஊழியர்கள் அவரை சமரசம் செய்து வேறு ஒரு மதுபாட்டில் கொடுத்தனர்.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே சுப்பிரமணியபுரத்தை அடுத்த நவாச்சாலையில் உள்ள அரசு மதுபானக் கடையில் நேற்று மாலை 34 வயது மதிக்கத்தக்க மதுப் பிரியர் ஒருவர் மதுபாட்டில் ஒன்று வாங்கிச் சென்றார்.

    அந்த மதுவை குடிப்பதற்காக பாட்டிலை திறக்க முயன்றபோது பாட்டிலில் ஒரு ஈ , ஒரு கட்டெறும்பு கிடந்துள்ளது.

    இதனைத்தொடர்ந்து அவர் மீண்டும் மதுக்கடைக்கு சென்று விற்பனையாளரிடம், பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ள இந்த பாட்டிலில் ஈ, எறும்பு எப்படி செத்து கிடக்கிறது? என்று கேட்டுள்ளார்.

    அப்போது மதுபான பாட்டிலில் ஈ, எறும்பு செத்து கிடப்பதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது என விற்பனையாளர் கூறியுள்ளார்.

    இதனால் மதுப்பிரியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து டாஸ்மாக் கடை ஊழியர்கள் அவரை சமரசம் செய்து வேறு ஒரு மதுபாட்டில் கொடுத்தனர்.

    இதனை அந்த வாடிக்கையாளர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளார். தற்போது அவை வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் மது பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • பழைய குற்றாலம் அருவியை வனத்துறை வசம் ஒப்படைக்க கூடாது என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
    • தற்போது வரை பழைய குற்றாலம் அருவிப்பகுதி வனத்துறை வசம் ஒப்படைக்கப்படவில்லை.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றுலா பயணிகள் குளித்து கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பலர் வெள்ளத்தில் சிக்கிய நிலையில் நெல்லையை சேர்ந்த அஸ்வின் (வயது 17) என்ற மாணவன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.

    அதனைத் தொடர்ந்து குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் மறு உத்தரவு வரும் வரை பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பழைய குற்றாலம் அருவி பகுதி பராமரிப்பு மற்றும் நிர்வாகத்தை மாவட்ட நிர்வாகம் வனத்துறை வசம் ஒப்படைத்து விட்டதாகவும் ஏற்கனவே குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி நிர்வாகம் வனத்துறை வசம் உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது.

    ஏற்கனவே தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பல ஆண்டுகாலம் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்து வந்த பழத்தோட்ட அருவியை தோட்டக்கலைத் துறையிடம் இருந்து வனத்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து இன்று அந்த அருவியை நிரந்தரமாக மூடிவிட்டனர்.

    மேலும் சிற்றருவி, செண்பகாதேவி ஆகிய அருவிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்த வனத்துறையினர் பொதுமக்கள் செண்பகாதேவி அருவிக்கு செல்வதற்கு தடை விதித்ததோடு அங்குள்ள புகழ்பெற்ற செண்பகாதேவி அம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களை கூட அங்கு செல்ல விடாமல் கெடுபிடி செய்து வருகிறார்கள்.

    மேலும் குற்றாலத்தில் ஆண்டாண்டு காலமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் பாதுகாப்பாக குளித்து வந்த சிற்றருவியை கைப்பற்றிய வனத்துறை இப்போது அங்கு குளிப்பதற்கு கட்டணம் வசூல் செய்வதோடு அந்த அருவிக்கு செல்லும் பாதையில் நிரந்தர கேட் அமைத்து பூட்டியுள்ள சம்பவமும் நடைபெற்றுள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் மணிமுத்தாறு அருவி, பாபநாசம் அகஸ்தியர் அருவி, உள்ளிட்ட அருவிப் பகுதிகள் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அந்த பகுதியில் உள்ள அருவிகள், கோவில்கள், நீர்நிலைகளுக்கு கூட செல்ல முடியாத அளவிற்கு வனத்துறையினர் கெடுபிடி செய்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.

    எனவே பழைய குற்றாலம் அருவியை வனத்துறை வசம் ஒப்படைக்க கூடாது என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இது பற்றி தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் கூறியதாவது:-

    மாவட்ட வனத்துறை சார்பில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பழைய குற்றாலம் அருவி பராமரிப்பு மற்றும் நிர்வாகத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கடிதம் கொடுத்துள்ளனர். ஆனால் அது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

    தற்போது வரை பழைய குற்றாலம் அருவிப்பகுதி வனத்துறை வசம் ஒப்படைக்கப்படவில்லை.

    ஆனால் பழைய குற்றாலம் அருவி பகுதிக்கு மேல் வெள்ளம் ஏற்படும் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் சென்சார் கருவிகள் பொருத்துவது குறித்து வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆய்வு மற்றும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    • குற்றாலம், ஐந்தருவிகளை வனத்துறை வசம் ஒப்படைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • ஏற்கெனவே சிற்றருவி, செண்பகாதேவி அருவி, புலி அருவி ஆகியவை வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையால் 2 நாட்களுக்கு முன்பு பழைய குற்றால அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது, அருவியில் குளித்துக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு அந்த இடத்தைவிட்டு வெளியேறினர்.

    இருப்பினும், வெள்ளப்பெருக்கில் அஸ்வின் என்ற சிறுவன் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான். தொடர்ந்து, கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதைதொடர்ந்து தென்காசி மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாட்டில் உள்ள பழைய குற்றாலம், மெயின் குற்றாலம், ஐந்தருவிகளை வனத்துறை வசம் ஒப்படைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஏற்கெனவே சிற்றருவி, செண்பகாதேவி அருவி, புலி அருவி ஆகியவை வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் பழைய குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்த அஸ்வின், சுதந்திரப் போராட்ட வீரரும் கப்பலோட்டிய தமிழனுமான வஉசியின் கொள்ளுப்பேரன் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    அதே நேரத்தில் சிறுவன் அஸ்வின் இறந்த சோகத்தில் அவரது குடும்பத்தினர் இருப்பதால் இதுகுறித்து பேச அவர்கள் மறுத்துவிட்டனர். மேலும் வீட்டுக்கு வேறு யாரும் வர வேண்டாம் எனவு அவர்கள் கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ×