என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் தெப்பத் திருவிழா
- கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் தெப்பத் திருவிழா நடைபெற்றது.
- தொடர்ந்து சுவாமி , அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி செண்பக வல்லி அம்பாள் உடனுறை பூவனநாதசுவாமி கோவில் பங்குனி பெருந்திருவிழா கடந்த 5-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
விழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் 9-வது நாளான கடந்த 13-ந் தேதி காலை சுவாமி-அம்பாள் தேர்களில் எழுந்தருளினர். தொடர்ந்து தேரோட்டம் நடந்தது. 14-ந் தேதி தீர்த்தவாரியும், மாலையில் சுவாமி, அம்பாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
அதைத் தொடர்ந்து நேற்று இரவு கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் தெப்பத் திருவிழாநடைபெற்றது. இதையொட்டி காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. திருவனந்தல், பூஜைகள் நடந்தன. காலை 10 மணிக்கு கும்பம் வைத்து ஹோமம் வளர்த்து சிறப்பு பூஜையும், தொடர்ந்து சுவாமி அம்பா ளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு சுவாமி அம்பாள் அலங்காரமாகி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து தெப்பத்தில் எழுந்தருளினர். அங்கு சுவாமி, அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் தெப்பத்தை 11 முறை வலம் வந்தனர். தொடர்ந்து சுவாமி ,அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி கோவிலை வந்து சேர்ந்தனர்.
விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போட ப்பட்டி ருந்தது. நிகழ்ச்சிக்கு நாடார் உறவின் முறை சங்க தலைவர் பழனிச்செல்வம், துணைத்தலைவர் செல்வராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். சங்க செயலாளர் ஜெயபாலன், பொருளாளர் சுரேஷ்குமார், பத்திரகாளியம்மன்கோவில் தர்மகர்த்தா மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காமராஜர் மெட்ரி குலேஷன் மேல்நிலைப்பள்ளி பொருளாளர் செல்வம் வர வேற்றார். தெப்பத்திருவிழா வினை கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்க டேஷ் தொடங்கி வைத்தார். விழாவை முன்னிட்டு காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் காமராஜர் சிலை அருகே எஸ்.ஆர். சந்திரனின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்