search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானலில் மலைச்சாலையில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல்
    X

    மூஞ்சிக்கல் பகுதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல்.

    கொடைக்கானலில் மலைச்சாலையில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல்

    • நகராட்சிக்கு உட்பட்ட சுற்றுலா தலங்களை நவீனமாக அழகு படுத்துதல் போன்ற திட்டங்களை நகராட்சி உருவாக்கி வருகின்றனர்.
    • பிரதான நெடுஞ்சாலையில் காய்கறி கடைகளை அமைத்துள்ளதால் சுற்றுலா பயணிகள் நெடுஞ்சாலை களிலேயே வாகனத்தை நிறுத்துகின்றனர்.

    கொடைக்கானல்:

    நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். ஏரிச்சாலையை அழகுறச் செய்யும் நோக்கில் விரிவான திட்டம், சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை சிரமம் இல்லாமல் பார்க்கிங் செய்வதற்கு ஏற்ற வகையில் மல்டி லெவல் கார் பார்க்கிங் ஏனைய நகராட்சிக்கு உட்பட்ட சுற்றுலா தலங்களை நவீனமாக அழகு படுத்துதல் போன்ற திட்டங்களை நகராட்சி உருவாக்கி வருகின்றனர்.

    நெடுஞ்சாலைத்துறையால் சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல்களை ஏற்படுத்தும் வகையில் கனரக வாகனங்களை நிறுத்துவது, பொதுமக்களுக்கு இடையூறாக கடைகள் அமைத்து வியாபாரம் செய்வது, பிரதான சாலைகளிலேயே மணல், ஜல்லி, செங்கல் என அடுக்கி வைத்து வியாபாரம் செய்வது என கொடைக்கானல் நகரே சீர் கெட்டு வருகிறது.

    ஜல்லிகற்கள் சாலையின் நடுவே சிதறி கிடப்பதால் இருசக்கர வாகனங்களில் வருவோர் கீழே விழுந்து காயம் அடைவதோடு உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மூஞ்சிக்கல் பகுதி வளைவுச்சாலையில் கனரக வாகனங்களை காலை மாலை வேளைகளில் நிறுத்தி வைப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    தங்கும் விடுதி வைத்திருப்போர் கார் பார்க்கிங் வசதியை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் என்று அரசு உத்தரவு போல் வணிக ரீதியிலான கனரக வாகனங்கள் வைத்திருப்போர் அதற்கான வாகன நிறத்தும் இடங்களையும் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவு பின்பற்றப்பட வேண்டும்.

    மூஞ்சிக்கல் பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களால் வளைவு சாலையில் காலை மாலை நேரங்களில் பள்ளி வாகனங்கள் செல்வதில் கடும் இன்னல் ஏற்படுகிறது. மேலும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர கால வாகனங்கள் செல்ல முடியாமல் தவிப்பது அன்றாட நிகழ்வாக உள்ளது.

    மேலும் பிரதான நெடுஞ்சாலையில் காய்கறி கடைகளை அமைத்துள்ளதால் சுற்றுலா பயணிகள் நெடுஞ்சாலைகளிலேயே வாகனத்தை நிறுத்துகின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டு ள்ளது.

    ஆனால் விதி மீறி சிலர் ஆக்கிரமிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்து றையினர் இதற்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×