search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராதாபுரம் தொகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது-முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை பேட்டி
    X

    இன்பதுரை

    ராதாபுரம் தொகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது-முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை பேட்டி

    • ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
    • சட்டங்கள் எதுவும் தெரியாமல் தற்போது உள்ள தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியின் அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அ.தி.மு.க. தேர்தல் இன்பதுரை மற்றும் அ.தி.மு.க.வினர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.

    குடிநீர் தட்டுப்பாடு

    அவர் அளித்த மனுவில், கூடங்குளம் பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. உடனடியாக கலெக்டர் தலையிட்டு கூடங்குளம் மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வள்ளியூர் பஸ் நிலை யத்தில் கட்டிட வேலையை துரிதப்படுத்த வேண்டும். பெரும்பாலான பஸ்கள் வள்ளியூர் ஊருக்குள் வராமல் புறவழிச்சாலையில் இயக்கப்படுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே அனைத்து பஸ்களும் வள்ளியூர் ஊருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிரு ந்தார்.

    பேட்டி

    தொடர்ந்து இன்பதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசால் லண்டன் மாநகரில் திறக்கப்பட்ட பென்னிகுயிக் உருவ சிலைக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாததால் கருப்பு துணி கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ளது. லண்டன் மாநகரில் தமிழகத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.

    சபாநாயகர் தொகுதியான ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பொதுமக்கள் சாலையில் இறங்கி போராடும் சூழல் உருவாகி உள்ளது. கட்டுமான நிறுவனங்கள், அணுமின் நிலையம் உள்ளிட்ட வைகளுக்கு தண்ணீரை விற்பனை செய்வதே இது போன்ற நிலைக்கு காரணம்.

    வருமானத்துறை சோதனையின் போது அதிகாரிகள் மீது தாக்குதல் நட த்தப்பட்டது கண்டனத்தி ற்குரியது. அதிகாரிகளுக்கு இது சோதனையான காலம். கரூர் மாவட்ட எஸ்.பி. மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். சி.ஆர்.பி.சி., ஐ.பி.சி. போன்ற சட்டங்கள் எதுவும் தெரியாமல் தற்போது உள்ள தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

    பீகார், ஒரிசா, தெலுங்கு படங்களில் மட்டும் தான் வருமானவரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

    அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி ராதாபு ரத்தில் புதிய திறப்பு விழா கண்டு கொண்டிருக்கிறனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×