search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் சீரான குடிநீர் வழங்க வேண்டும் - கவுன்சிலர் தலைமையில் பொதுமக்கள் மனு
    X

    சாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் சீரான குடிநீர் வழங்க வேண்டும் - கவுன்சிலர் தலைமையில் பொதுமக்கள் மனு

    • சாத்தான்குளத்தில் 2 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்த குடிநீர் தற்போது 3 நாட்களுக்கு ஒருமுறை விநியோகிக்கப்படுகிறது.
    • மேலும் பேரூராட்சி 7-வது வார்டுக்குட்பட்ட அழகம்மன் கோவில் தெரு உள்ளிட்ட தெருக்களில் கடந்த 15 நாட்களாக முறையாக குடிநீர் கிடைக்கவில்லை என்று மனுவில் கூறியுள்ளனர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் பேரூராட்சி கவுன்சிலர் லிசா தலைமையில் பொதுமக்கள் இளநிலை உதவியாளர் ஆறுமுகத்திடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    சாத்தான்குளம் பேரூராட்சியில் போதிய மழையின்மையால் ஏற்பட்ட வறட்சி காரணமாகவும், ஸ்ரீவைகுண்டம் உறைகிணற்றில் ஏற்பட்ட நீர் இருப்பு குறைவினாலும் இங்கு குடிநீர் விநியோகிப்பது பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 2 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்த குடிநீர் தற்போது 3 நாட்களுக்கு ஒருமுறை விநியோகிக்கப்படுகிறது. இதனால் பல தெருகளுக்கு போதுமான குடிநீர் கிடைக்கவில்லையென புகார் எழுந்துள்ளது.

    மேலும் பேரூராட்சி 7-வது வார்டுக்குட்பட்ட அழகம்மன் கோவில் தெரு, கரையாளர்தெரு, அருணாசலசெட்டியார் தெரு உள்ளிட்ட தெருகளில் கடந்த 15 நாட்களாக முறையாக குடிநீர் கிடைக்கவில்லை. இதனால் பொதுமக்கள் லாரி தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலையில் உள்ளனர். எனவே முன்புபோல் முறையாக குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அருணாசல செட்டியார் தெருவில் சேதமான சாலையை சீரமைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×