search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருமத்தம்பட்டி அருகே மழையால் சேதமான சாலை வடிகால் அமைக்க வலியுறுத்தல்
    X

    கருமத்தம்பட்டி அருகே மழையால் சேதமான சாலை வடிகால் அமைக்க வலியுறுத்தல்

    • இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றன.
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

    கருமத்தம்பட்டி,

    கருமத்தம்பட்டி, சோமனூர் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணாபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாகவும் மேலும் நெடுஞ்சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரால் இவ்வழியாக செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருவதாகவும் கூறப்பட்டது.

    பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி இப்பகுதி சாலையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற இந்த சாலையோரத்தில் மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்நிலையில் கடந்த ஒரு சில வருடங்களுக்கு முன்பு கருமத்தம்பட்டி கிருஷ்ணாபுரம் பவர் ஹவுஸ் பகுதியில் தரைமட்டபாலம் கட்டப்பட்டது. கடந்த சில தினங்களாக சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

    இப்பகுதியில் கடந்த ஒரு சில வருடத்திற்கு முன்பு வரை தொடர்ந்து மழைநீர் சாலையில் தேங்கி நின்று சாலை பழுதைடந்து அவ்வ ப்போது விபத்துகளும் ஏற்பட்டு வந்தது. இதனை அடுத்து தொடர்ந்து இப்பகு தியில் தரைமட்ட பாலம் கட்ட கோரிக்கை விடுத்து வந்தோம். இதனையடுத்து கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மழைநீர் செல்ல தரைமட்ட பாலம் கட்டப்பட்டது.

    ஆனால் தரைமட்ட பாலம் கட்டப்பட்டு எவ்வித பயனும் இல்லை. கிருஷ்ணா புரம், பவர் ஹவுஸ், சோமனூர் போன்ற பகுதிகளில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. செந்தில் நகர் பகுதியில் இருந்து வரும் மழைநீர் கிருஷ்ணாபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலை யில் தேங்கி நின்றதால் அப்பகுதியில் இருந்த தேசிய நெடுஞ்சாலை சேதமடைந்தது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே இதுகுறித்து கருமத்தம்பட்டி நகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மழைநீர் செல்ல ஏதுவாக வடிகால் கால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×