என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தஞ்சை கலியுக வெங்கடேச பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
- ஆண்டுதோறும் கும்பாபிஷேகம் தினத்தில் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். .
- சீர்வரிசைகளுடன் பக்தர்கள் கோவிலுக்கு வந்ததை தொடர்ந்து திருக்கல்யாணம் நடைபெற்றது
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் தெற்கு வீதியில் புகழ்பெற்ற கலியுக வெங்கடேச பெருமாள் அமைந்துள்ளது.திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் கலியுக வெங்கடேச பெருமாளாகவும் சதுர்புஜ வரதராஜ பெருமாளாகவும் காட்சி தருவதாக ஐதீகம். இத்தலத்தில் ஆண்டு தோறும் கும்பாபிஷேகம் தினத்தில் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் நேற்று 12-ம் ஆண்டு கும்பாபிஷேகம் தினவிழா விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் , அலங்காரம் தீபாராதனை நடந்தது. இதையடுத்து சீர்வரிசைகளுடன் பக்தர்கள் கோவிலுக்கு வந்தார்கள். தொடர்ந்து திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தார்கள்.பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா, கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தார்கள்.